அரசு முதல்நிலை கல்லுாரிகளில், கடந்த ஐந்து மாதங்களாக
தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என, சிறப்பு விரிவுரையாளர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
அரசு கல்லுாரி சிறப்பு விரிவுரையாளர் ஒருங்கிணைப்பு குழு
மாநில ஒருங்கிணைப்பு செயலர் ராஜேஷ்குமார் கூறியதாவது:
மாநிலம் முழுவதும், 421 முதல்நிலை கல்லுாரிகளில், 12
ஆயிரத்து, 800 சிறப்பு விரிவுரையாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு மாத
ஊதியம், 9,500 ரூபாய் வழங்கப்படுகிறது.அரசு தற்போது, சாதாரண துப்புரவு
தொழிலாளருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயித்துள்ளது. ஆனால், சிறப்பு
விரிவுரையாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் நிர்ணயிக்க
மறுத்து வருகிறது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி, 13ம்
தேதி முதல் பிப்ரவரி, 15ம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு
ஈடாக, கூடுதல் பணி செய்து அதை ஈடு செய்துள்ளோம்.இந்த நாட்களுக்கான ஊதியம்
வழங்க கோரினோம். நிதி விடுவிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது; இதுவரை
கிடைக்கவில்லை.இந்த பிரச்னை அரசுக்கும் தெரியும், இருந்தும் ஜூலை முதல்
வழக்கமாக வழங்கும் சம்பளமும் நிறுத்தப்பட்டு உள்ளது. விரிவுரையாளர்கள்
பலர், திருமணமாகி குழந்தைகள், பெற்றோருடன் வசிப்பவர்கள். இதை உணர்ந்தாவது,
அரசு உடனடியாக சம்பள தொகையை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...