தேர்தல்களில் பிளாஸ்டிக் கொடிகள், பதாகைகள் (பேனர்கள்) பயன்படுத்தப்படுவதை
முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆந்திரத்தைச் சேர்ந்த ரவிகிரண் சிங் என்பவர் மனு தொடுத்தார். அதில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் சார்பில், ஏராளமான இடங்களில் பாலிவினைல் குளோரைடினால் ஆன பொருட்களும், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட கொடிகளும், பேனர்களும் வைக்கப்படுகின்றன. ஆனால், அவை தேர்தல் முடிவடைந்ததும் அகற்றப்படாமல் பொது இடங்களில் வீசப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, தேர்தல்களில் அத்தகைய பொருட்களால் செய்யப்பட்ட கொடிகள், பேனர்களை பயன்படுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தேர்தல்களில் பிளாஸ்டிக் கொடிகள், தோரணங்கள், பேனர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கும் கடுமையான அபராதம் விதிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய பசுமைத் தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
தேர்தல்களில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் பாலிவினைல் குளோரைடினால் ஆன பொருட்களையும், பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் ஆகியவற்றையும் பயன்படுத்துவதற்கு 6 மாதங்களில் தடை விதிப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிடுகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தை மனுதாரர் சுதந்திரமாக அணுகவும் அனுமதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...