அரசு பள்ளி மாணவர்கள், சர்வதேச அளவில் புகழ் பெற, சி.பி.எஸ்.இ., பாடத்
திட்டத்தை விட, உயர்ந்த பாடத்திட்டத்தை வழங்கும் தன் கனவு, நனவாகும் முன்,
ஜெயலலிதா மறைந்தது, அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை அதிர்ச்சியடைய
வைத்துள்ளது.
தமிழகத்தில், 2001ல், அ.தி.மு.க., ஆட்சி
பொறுப்பேற்றதும், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இக்குழு
பரிந்துரைத்த பாடத்திட்டம், 2006ல், அமலானது.
இதை தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியில், பல வகை பாடத்திட்டங்களை
ஒருங்கிணைத்து, சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகமானது. இத்திட்டம், 2011 -
12ல், அமலுக்கு வரும் போது, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க.,
ஆட்சி அமைந்தது. 'சமச்சீர் பாடத் திட்டத்தை படித்தால், தமிழக மாணவர்கள்,
தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேர்வுகளில் போட்டி போட முடியாது' என,
கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். உடனே, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க,
ஜெயலலிதா குழுவை அமைத்தார். பொதுநல வழக்கில், சமச்சீர் திட்டமே தொடர
வேண்டும் என, சென்னை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக பாண்டியராஜன் பொறுப்பேற்றதும், '10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காவது, தேசிய அளவில், உயர்ந்த பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்' என, ஜெயலலிதா, தன் கனவுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, தனியாக குழுக்கள் அமைக்க, கல்வித் துறை முயற்சி மேற்கொண்ட நிலையில், ஜெயலலிதா மறைந்து விட்டார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...