குறைந்த மாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லை என்ற அதிரடியான உத்தரவை
மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் இருந்தே இதற்கான
தொகையை பிடித்தம் செய்வதால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய
அரசின் இந்த முடிவால் ஓய்வு பெறும் தொழிலாளர்களின் சேமிப்பு
கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் 60 ஆண்டுகால இ.பி.எஃப். முறைக்கு சாவு
மணி அடிக்கப்பட்டுள்ளதாக இந்த முடிவு அமைந்துள்ளது என தொழிற்சங்க
பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் முடிவால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்ச
பங்களிப்பை 12 சதவிதத்தில் இருந்து குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய
தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பு
காரணமாக நாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்ய முடியாமல் மோடி அரசு
நிலுவையி்ல் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...