ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்
தொகைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு நிமிட டாக் டைம் என்ற சிறப்புச் சலுகையை
ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் சேமிக்கும் வசதியுடன் தொடங்கப்பட்டதுதான் பேமெண்ட் பேங்க். இந்த பேமெண்ட் பேங்க் சேவையைத் தொடங்குவதற்கான ஒப்புதல் பெற்ற 11 இந்திய நிறுவனங்களில் முன்னோடியாக ஏர்டெல் நிறுவனம், தனது பேமெண்ட் பேங்க் சேவையை ஜெய்ப்பூரில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. ஏர்டெல் ஸ்டோர்களில் சென்று இந்த வங்கிக் கணக்குகளை ஒருவர் தொடங்கலாம். ஆரம்பிக்கப்பட்ட இரண்டு நாட்களில் சுமார் 10,000 பேர் இதில் வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒருவர் ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் ரூ.1000 டெபாசிட் செய்தால் அவருக்கு 1000 நிமிட இலவச டாக் டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஏர்டெல் நெட்வொர்க்கிலிருந்து மற்றொரு ஏர்டெல் நெட்வொர்க் எண்ணுக்கு மட்டுமே இந்த இலவச நிமிடச் சலுகை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...