நடா புயலில் எதிர்பார்க்கப்பட்ட மழை பொய்த்துப் போனதாக தகட்டூர் தேநீர்
கடையில் எழுதப்பட்ட வானிலை தகவலில், அடுத்து வர்டா புயல் உருவாகி வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் உள்ள தேநீர் கடையில், வானசாஸ்திர வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார், வழக்கம்போல வெள்ளிக்கிழமை எழுதி ஒட்டியுள்ள வானிலை குறித்த தகவல்:
நடா புயல் சுழற்சியின்போது, நிலப்பரப்பில் நிலவிய இமயமலை குளிரை வெகுவாக ஈர்த்துக்கொண்டதால், போதிய கடல் சூடு இல்லாமல் மழை குறைந்து பனிப் பொழிவோடு போய்விட்டது. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மலேசியா-இந்தோனேஷியா இடைப்பட்ட கடல் பரப்பில் தற்போது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது, டிசம்பர் 4-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பரப்பை வந்தடைந்து தாழ்வு மண்டலமாக மாறி, தென்கிழக்கு வங்கக் கடலில் வடகிழக்காக நகர்ந்து புயலாக தீவிரமடையும். அதற்கு பெயர் சூட்டும் வரிசையில் வர்டா என்றழைக்கப்படும்.
இந்தப் புயல் மணிக்கு 150 கி.மீ. இருந்து தீவிரமடைய வாய்ப்புள்ளது. டிசம்பர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இது, தற்போது உள்ள சூழலில் ஆந்திரத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்புகள் (70 சதவீதம்) அதிகம்.
புதுவை, தமிழக (புதுச்சேரி-சென்னை,நெல்லூர்) பகுதிக்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவே. இந்தப் புயல் தமிழகத்தை சற்று நெருங்கி வந்தால் பலத்த மழைக்கு வாய்ப்பு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...