'திருவனந்தபுரம்: கேரளாவில், முதன் முறையாக, சோலார் எனப்படும் சூரிய
மின்சக்தி மூலம் இயங்கும், படகுச் சேவை, ஜனவரி, 12ல் துவங்க உள்ளது.
'சோலார்' படகு :
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில், கோட்டயம், ஆலப்புழா, கொச்சி மாவட்டங்களில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயன்பாட்டிற்கு படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகுகள், பெரும்பாலும் டீசல் அல்லது பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அம்மாநில அரசு, மாற்று எரிசக்தியை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சூரிய மின் சக்தியில் இயங்கும், படகு போக்குவரத்து துவங்கப்பட உள்ளது.
ஜன., 12 முதல் :
இதுகுறித்து, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சசிதரன் கூறியதாவது: கேரளாவில், சாலை போக்குவரத்திற்கு மாற்றாக, நீர் வழி போக்குவரத்தையும் ஊக்குவித்து வருகிறோம். இதன் ஒருபகுதியாக, சூரிய மின் சக்தி மூலம் இயங்கும் படகு சேவை துவக்கப்படுகிறது. முதல் சேவை, கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் இருந்து, கொச்சிக்கு, 180 கி.மீ., தொலைவிற்கு, ஜனவரி, 12ல், துவங்கும்; இதில், 75 பயணிகள் பயணம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...