ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, நேற்று துவங்கியது.
இதில், ஆதார் எண் இல்லாதோர் விண்ணப்பிக்க முடியாது.
ஐ.ஐ.டி., மற்றும்
என்.ஐ.டி., நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜினியரிங்
படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பின், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். வரும் கல்வி ஆண்டில், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., மெயின்
எழுத்துத் தேர்வு, ஏப்., 2ல் நடக்கிறது. இதற்கு, நேற்று முதல், ஆன்லைன்
விண்ணப்பப் பதிவு துவங்கியது. சி.பி.எஸ்.இ., வாரியம் நடத்தும் இந்த
தேர்வுக்கு, www.jeeadv.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை பதிவு செய்ய
வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆதார் எண் கட்டாயம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது; இதற்கு, பிளஸ் 2 படிப்போர் விண்ணப்பிக்கலாம். ஆதார்
இன்றி, ஜே.இ.இ.,க்கு விண்ணப்பிக்க முயற்சிப்போருக்கு, அவ்வெண் பதிவுக்கான
சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முகாம் விபரங்களை,
சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...