தடய அறிவியல் துறையில் தகுதியான நபர்களை நியமிக்க விதிகளை உருவாக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் முன்னாள் செயலாளர் எம்.வேல்முருகன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சைபர் குற்றங்களை புலனாய்வு செய்யும் தடய அறிவியல் துறையில் கணினி அறிவியல், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தகுதியான ஊழியர்கள் இல்லை. சைபர் குற்றங்கள் பெருகி
வரும் இக்காலகட்டத்தில் உலகம் முழுவதும் அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு குற்றங்கள் உடனுக்குடன் புலனாய்வு செய்யப்படுகிறது. முக்கியமாக தடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற சூழல் இல்லை. எனவே, தடய அறிவியல் துறையில் சைபர் கிரைம் வழக்குகளை புலனாய்வு செய்யும் பிரிவில், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டம் பெற்றவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். தகுதியில்லாத நபர்களை அப்பணிகளுக்கு நியமிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘தகுதியான நபர்களை தடய அறிவியல் துறையில் நியமிக்கும் விதமாக தமிழக அரசு 4 மாதத்திற்குள் புதிதாக பணி விதிகளை உருவாக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...