உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொண்டாலும் உடலுக்கு தீங்கு தான் என
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைவான உப்பால் தீங்கு :
நாட்டிலேயே தமிழகத்தில் உள்ளவர்கள் தான் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராம உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.
இதயநோய் பாதிப்புக்களை தவிர்க்க உப்பின் அளவை குறைக்க வேண்டும் என டாக்டர்களும் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் புதிய ஆய்வின்படி, குறைவாக உப்பு சேர்த்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதயநோய் அபாயம் :
குறைவாக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து 'தி லேன்செட்' நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில், சராசரியான அளவை விட குறைவாக உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது வாத நோய் தாக்குதல் அபாயம் உண்டு என்பது தெரிய வந்துள்ளது. உப்பு குறைவாக சேர்த்து கொண்டால் தான் உடலுக்கு நல்லது என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் குறைவாக உப்பு சேர்ப்பதால் எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக, இதயநோய் பாதிப்புக்களே அதிகம் எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு தேவை :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமே அதிகப்படியான உப்பை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை குறைக்க உப்பை குறைவாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படும் அபாயம் உண்டு. இந்த ஆய்வு அறிக்கை உண்மை என சென்னையை சேர்ந்த பல உணவுத்துறை நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். சரியான அளவில் உப்பு சேர்த்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உணவில் உப்பு சேர்த்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு சில டாக்டர்களிடமே இருப்பதில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...