உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக,
தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்காக மத்திய அரசு, விருது
வழங்கி பாராட்டி உள்ளது.
டில்லியில் நடந்த, ஏழாவது இந்திய உடல் உறுப்பு தான நிகழ்ச்சியில், முதலிடம்
பெற்ற தற்கான, மத்திய அரசு விருதை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்,
ஜெ.பி.நட்டா வழங்கினார்.அதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
4,992 உறுப்புகள் :
விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகம், இரண்டாவது முறையாக,
தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில்,முதல் நிலையில் உள்ளது. தமிழகத்தில்
இதுவரை, 895 கொடையாளர்களிடம் இருந்து, 4,992 உறுப்புகள் தானமாகபெறப்பட்டுள்
ளது.
இதன் மூலம், உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில்,உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இலவசமாக
செய்யப்படுகிறது.
ரூ.30 லட்சம் :
தனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் விரி வான மருத்துவ காப்பீட்டு
திட்டத்தின் மூலம், இச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு, எந்த
மாநிலத்திலும் இல்லாத வகை யில், 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...