இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் டேட்டா திட்டங்களின் விலை குறைந்து வருகிறது.
இங்கு டேட்டா திட்டங்கள் உலகளவில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்நிலையில் இன்றும் 95 கோடி இந்தியர்களிடம் இணைய வசதியில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இணைய வசதி இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் அதிகப்படியான மொழிகள் (சுமார் 1600 மொழிகள்) மற்றும் டிஜிட்டல் சார்ந்த கல்வி பற்றாக்குறை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளது என அசோஷம் மற்றும் டீலொய்ட் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்துடன் சைபர் குற்றம் மற்றும் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவையும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளுக்கு இடர்பாடுகளாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் வேலைக்கு செல்வோரில் சுமார் 50 சதவிகிதம் பேர் முறையான பயிற்சி பெற்றிருக்கும் நிலையில் இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் வெறும் 2.3 சதவிகிதம் பேர் மட்டுமே பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
தொழில்நுட்பங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த ஏதுவாக அவற்றின் விலையை தற்சமயம் இருப்பதை விட மேலும் குறைக்க வேண்டும். இதனால் ஏழ்மை பிடியில் இருப்பவர்களுக்கும் இணைய வசதி கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...