தமிழகத்தில் உள்ள 770 அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில்
துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்
தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம்
23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில்
மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது, தமிழக
மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும்
வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர்
வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர்
கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும்
வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப்
பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர்.
இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும்
தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு
கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட
உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22
லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி
பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம்
துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையத்திலோ அல்லது பள்ளிகளிலோ நடைபெறும்
பாடத்தினைவகுப்பறையில் விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள்
கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும்
வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.
இந்த வகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில்
இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது
மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த
வகுப்பறை அமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி
கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை
பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன்
கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல்
அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில்
கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது
பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன்
கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை
கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்,
விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும்,
மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார்.
ரயில்வே கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்? பஸ் கட்டணங்கள் அதிகமாக
இருப்பதால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில்களில் பயணம்
செய்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக பாஜ அரசு மத்தியில்
பதவியேற்றது முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால்
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரயில்வே கட்டமைப்புகளை
மேம்படுத்தும் நோக்கத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு ரயில்
கட்டணங்களை கடுமையாக உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்து வதற்காக
ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிதித்தொகுப்பை உருவாக்க
அத்துறைதிட்டமிட்டுள் ளது. ஆனால் இத்தொகையில் 25 சதவீதத்தை மட்டுமே தர
மத்திய நிதியமைச்சகம் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே மீதமுள்ள நிதியை
பயணிகள் கட்டணம் மூலம் திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயர்
வகுப்பு கட்டணங்கள் ஏற்கனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும்
இப்போதைய நிதித் தேவையைக் காரணம் காட்டி அதை மேலும் உயர்த்த
திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படுக்கை வசதி ஆகிய
பிரிவு களில் பயணம் செய்வோரின் கட்டணத்தையும் உயர்த்த ரயில்வே அமைச்சகம்
திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூடு தலாக வசூலிக்கப்படும் கட் டணம்
ரயில்வே பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ள
நிதித் தொகுப்பில் சேர்க் கப்படும் எனக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக ரயில்வேதுறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டு வந்தது. வரும் நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே
பட்ஜெட் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரயில் பயண பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.1,19,183 கோடி நிதி தேவை
என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு
கடிதம் எழுதினார். இந்த நிதியின் மூலம் தண்டவாளங்கள், சிக்னல்களை
மேம்படுத்தவும் ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை
அமைக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்ட மிட்டிருந்தது. ரயில்வே அமைச்சரின்
கோரிக்கையை பரிசீலித்த நிதியமைச்சகம் 25 சதவீத நிதியை மட்டும் ஒதுக்க
முன்வந்துள்ளது. மீதமுள்ள 75 சதவீத தொகையை செஸ் வரி மூலம் திரட்டுமாறு
அறிவுறுத்தியுள்ளது. இதற்காகவே விரைவில் ரயில் கட்டணம் உயர்த்தப்படும்
என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...