ஐந்து பல்கலைகளில், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், புதிய
படிப்புகளுக்கு அனுமதி பெற முடியாமல், கல்லுாரிகள் தவிக்கின்றன.
சில
ஆண்டுகளாக, தமிழக உயர் கல்வித் துறையில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு,
மாணவர்களும், பேராசிரியர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். பல்கலைகளில்,
துணைவேந்தர்கள் இல்லாததால், புதிய படிப்புகளை துவங்க, கல்லுாரிகளுக்கு
அனுமதி கிடைக்கவில்லை.
அதனால், பல தனியார், அரசு உதவிபெறும் கல்லுாரிகள்,
புதிய படிப்புக்கு அனுமதி கேட்டு, பல மாதங்களாக காத்திருக்கின்றன. தற்போதைய
நிலையில், சென்னை பல்கலையில், ஜன., முதல்; அண்ணா பல்கலையில், மே முதல்;
மதுரை காமராஜர் பல்கலையில், இரு ஆண்டுகளாக; நாகையில் உள்ள, தமிழ்நாடு
மீன்வள பல்கலையில், மார்ச் முதலும், துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளன.
சென்னையிலுள்ள, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டக் கல்லுாரி துணைவேந்தர்
வணங்காமுடி, ஒரு வாரத்திற்கு முன் ஓய்வு பெற்றார்; இந்த இடமும் காலியாக
உள்ளது. மொத்தம், ஐந்து கல்லுாரிகளில் துணைவேந்தர் இல்லை.
இது குறித்து, பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் கூறியதாவது:
பல்கலைகளில், துணைவேந்தர் பதவியை நிரப்புவதில், உயர் கல்வித் துறை மற்றும்
சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். துணைவேந்தர்
இல்லாவிட்டால், பல்கலையின் நிர்வாக விவகாரங்களில், நேரடியாக அதிகாரம்
செலுத்த முடியும் என்பதால், துணைவேந்தர் பதவியை காலியாக வைத்திருக்கவே
விரும்புகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...