டெல்லி அரசு தங்களது அனைத்து அரசுத்துறைகளையும், அரசு சம்பந்தமான பணிகளில்
ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுக்கு, நிறுவனத்துக்கு, ரூ.5,000க்கு மேல் பணம்
செலுத்த வேண்டியிருந்தால் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவேண்டும் என்று
அறிவித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் அமைச்சரவையின், ரூ.5000 ரூபாய்க்கு மேற்பட்ட எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் மின்னணு முறையில் செலுத்த வேண்டும் என்று நிதித்துறை அமைச்சகம் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி நிதித்துறை மத்திய நிதியமைச்சகத்தின் குறிப்பாணையை அளித்தது. அதில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அரசின் எல்லா துறைகளும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
RTGS, NEFT, ECS போன்ற முறைகளின்படி அரசு சம்பந்தமான பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததார்கள், நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த பரிவர்த்தனையை அரசு தொடர்பான நிறுவனங்கள் மட்டுமல்லாது தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசின் கார்ப்பரேஷன் அமைப்புகள் ஆகியவையும் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை, ரூ.10,000க்கு மேல் செலுத்த வேண்டியிருந்தால் மட்டுமே இந்த முறையை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், தற்போது அதை குறைத்து 5,௦௦௦ ரூபாயைத் தாண்டினாலே அரசு நிறுவனங்கள் தங்களது ஒப்பந்ததாரர்களுக்கு, நிறுவனங்களுக்கு மற்றும் சப்ளையர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...