சேலம்: தமிழகத்தில், 40 சதவீதம் அரசு பேருந்துகள், பணிமனைகள் மற்றும்
பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.
தமிழக அரசு போக்குவரத்து
கழகம், 22 ஆயிரத்து, 474 பேருந்துகளை இயக்குகிறது. நேற்று முன்தினம் இரவு,
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியதால்,
கிராமங்களுக்கான பஸ் சேவை, நேற்று காலை, 7:00 மணிக்கு பின்பே துவங்கியது.
நேற்று மதியம், முதல்வரின் உடல்நிலை கவலைக் கிடமாக
உள்ளதாக தகவல் பரவியதால், பேருந்து சேவையை, அதிகாரிகள் குறைக்க துவங்கினர்.
முதல் கட்டமாக, 2013க்கு பின் இயக்கத்துக்கு வந்த பேருந்துகள்
கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து,
நெடுந்துாரம் இயக்கப்படும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது. தேவையின்றி
பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் பேருந்துகளை நிறுத்துவதை
தவிர்த்து, பணிமனைகளில் நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று, 15
ஆயிரம் பேந்துகள் இயக்கப்பட்ட நிலையில், மதியம் வரை, 40 சதவீத
பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின், படிப்படியாக குறைக்கப்பட்டு,
பணிமனைகளுக்கு பேருந்துகள் அனுப்பப்பட்டன.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வரின் உடல்நிலை குறித்து
தகவல் பரவியதால், பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, உயர் அதிகாரிகள்
வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். அதனால், பணிமனைகளுக்கு பேருந்து அனுப்பி
வைக்கப்பட்டன' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...