பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணத் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி வங்கி ஊழியர்கள் வரும் 28-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஆகியவை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கி களில் கடும் பணத்தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கியிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வங்கி ஊழியர்களும், பொதுமக்க ளும் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.எனவே அனைத்து வங்கிகளுக் கும் போதிய அளவு பணத்தை ரிசர்வ் வங்கி உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஏடிஎம்களும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளுக்கு பணம் வழங்குவதில் வெளிப்படைத் தன் மையை கடைபிடிக்க வேண்டும். வங்கிகளுக்கு போதுமான பணத்தை ரிசர்வ் வங்கியால் வழங்க முடியாவிட்டால் அனைத்து வங்கிகளிலும் பணப் பரிவர்த் தனையை நிறுத்த வேண்டும்.வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் சில முக்கிய பிரமுகர்களிடம் இருந்து அதிகளவு புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து வங்கிகளிலும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே போல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் கூடுதல் நேரம் பணியாற்றிவரும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு கூடுதல் பணிக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி உடனடியாக நிறைவேற்ற வில்லை எனில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டமும், 29-ம் தேதி அனைத்து வங்கி சங்கங்களும் சேர்ந்து நிதியமைச்சருக்கு கடிதம் எழுதுதல், ஜனவரி 2-ம் தேதி வங்கி ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணியும் போராட்டமும், 3-ம் தேதி ஆர்பிஐ வங்கி மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள முக்கிய வங்கிகள் முன்பு தர்ணா போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு சுற்றிறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...