சென்னை, நவம்பர் மாத சம்பளம் போடப்பட்டு 3-வது நாளாக வங்கிகளில் பணம்
எடுக்க அரசு, பொதுத்துறை ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர்.
வங்கிகளில்
நேரடியாக பணம் பெற...அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன
ஊழியர்களுக்கு, நவம்பர் மாத சம்பளம், நவம்பர் 30-ந் தேதி காலை 10 மணிக்கு
முன்னதாகவே வங்கி கணக்கில்
போடப்பட்டுள்ளது.ஏ.டி.எம்.களில் 2 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்ற போதிலும், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடியே காணப்படுகின்றன. திறந்திருக்கும் ஏ.டி.எம்.களிலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டே நிரப்பப்படுவதால், 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற முடிகிறது.எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்தை வங்கிகளில் நேரடியாக காசோலை அல்லது வரைவுச்சீட்டு கொடுத்தோ தாங்கள் விரும்பிய அளவிலான பணத்தை பெறுவதற்காக 30-ந் தேதி காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து வருகின்றனர்.3-வது நாளாக கூட்டம் குறையவில்லைஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் காசோலை அல்லது வரைவுச்சீட்டு கொடுத்து வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்ற போதிலும், வங்கிகளில் போதிய பணம் இல்லாத காரணத்தால் ஒவ்வொருவருக்கும் தலா 4,000 ரூபாய், 6,000 ரூபாய் என நிர்ணயம் செய்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட்டு 3-வது நாளான நேற்றும் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் தங்கள் சம்பள பணத்தை எடுக்க திண்டாடி வருகின்றனர்.மாத தொடக்கத்தில் தேவை அதிகம்அரசு ஊழியர்களானாலும் சரி, பொதுத்துறை ஊழியர்களானாலும் சரி, இதர மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களானாலும் சரி மாதத்தின் தொடக்கத்தில் அவர்களின் தேவை சற்று அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் குறைந்த அளவில் பணம் தருவது தங்களின் தேவைக்கு தட்டுப்பாடாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத அரசு ஊழியர் ஒருவர் கூறியதாவது:-500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து இருப்பது மிகவும் சிறந்த ஒரு திட்டம். அதே போன்று ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருப்பதும் போதுமான ஒன்று தான்.ஏ.டி.எம்.கள் இயங்கினால் போதும்ஆனால் அந்த 24 ஆயிரம் ரூபாயை ஒரே தவணையாக எடுக்க முடியாத அளவிற்கு வங்கிகளில் பணம் தட்டுப்பாடாக இருப்பது தான் சிரமமாக உள்ளது. அல்லது ஏ.டி.எம்.களில் முழுமையான அளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினால் கூட போதுமானது. நாங்கள் அலுவலகத்தில் அனுமதி பெற்று அல்லது ½ நாள் விடுப்பு போட்டு வங்கிகளில் வந்து காவல் நிற்க வேண்டி இருக்கிறது.அப்படி வங்கிகளில் காத்திருந்தும், தேவையான அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. இதற்காக இன்னும் ஓரிரு நாட்கள் வங்கியில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். இது தான் வேதனையாக இருக்கிறது. எனவே ஏ.டி.எம்.கள் முழு அளவில் இயங்கினாலே போதும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் கூட்டம் குறைந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...