Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆஸ்திரேலியாவை விட கேரளாவின் 3 நிறுவனங்களில் அதிகமான தங்கம்!!!

           கொச்சி, இந்தியாவில் மொத்தம் உள்ள தங்கத்தின் 47 சதவிதம் கேரளாவின் மூன்று கடன் கொடுக்கும் நிறுவனங்களில் உள்ளது. கேரளாவை சேர்ந்த மூன்று தங்க மிகப்பெரிய தங்க கடன் நிறுவனங்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக 195 டன்னாக இருந்தது கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் 263 டன்னாக உயர்ந்து உள்ளது. மூன்று நிறுவனங்களிலும் பிற நாடுகளில் உள்ள மொத்த கையிருப்பு

தங்கத்தைவிட அதிக மதிப்புடைய தங்கம் குவிந்து உள்ளது. கேரளாவை மூன்று முக்கிய தங்க கடன் நிறுவனங்களில் மட்டும் 265 டன்கள் மட்டும் தங்க நகைகள் குவிந்து உள்ளது, இது பெல்ஜியம், சிங்கப்பூர், சுவிடன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள மொத்த கையிருப்பு தங்கத்தைவிட அதிகமானதாகும். உலக நாடுகளின் மொத்த தங்கத்தின் தேவையில் இந்தியா முப்பது சதவிதத்தை தன்னகமாக கொண்டு உள்ளது. இந்தியாவில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் சேமிப்பாக கருதி தங்க முதலீடு செய்கின்றனர். கேரளாவில் தங்க தொழில்துறையில் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு கொண்டு உள்ளனர். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் பெற இந்தியா முழுவதும் தங்கம் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. கேராளவை சேர்ந்த மூன்று நிறுவனங்களில் உள்ள தங்கத்தின் அளவானது கடந்த இரண்டு வருடங்களில் 116 டன்களில் இருந்து 150 டன்னுக்கு உயர்ந்து உள்ளது. இது பிற நாடுகளில் உள்ள தங்கத்தின் அளவைவிட அதிகமானது. பிற நாடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு சிங்கப்பூர் (127.4 டன்கள்), சுவிடன் (125.7 டன்கள்), ஆஸ்திரேலியா (79.9 டன்கள்), குவைத் (79 டன்கள்), டென்மார்க் (66.5 டன்கள்) மற்றும் பின்லாந்து (49.1 டன்கள்). உலக தங்க கவுன்சில் தகவலின்படி இந்தியா அதிகமாக கையிருப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் 558 டன்களுடன் 11 இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்கா முதலிடம் பிடித்து உள்ளது, அமெரிக்காவில் மட்டும் 8,134 டன்கள் தங்கம் உள்ளது. அடுத்தப்படியாக ஜெர்மனி மற்றும் சர்வதேச செலாவணி மையத்திடம் அதிகப்பட்சமாக தங்கம் உள்ளது. முறையே 3,378 மற்றும் 2,814 டன்கள் அளவில் தங்கம் உள்ளது. ஜிஎப்எம்எஸ் என்ற வர்த்தக ஆய்வு நிறுவன தகவலின்படி தங்க நகைகள் நுகர்வில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது என குறிப்பிட்டு உள்ளது, இந்த ஆண்டில் மூன்றாவது காலாண்டில் இந்தியா 107.6 டன்கள் அளவில் தங்க நகைகளை கொண்டு உள்ளது. இதே ஆண்டில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஒன்றாக 67.1 டன்கள் அளவில் இறக்குமதி செய்து உள்ளது. சீனா இவ்வரிசையில் 98.1 டன்களுடன் இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive