தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும்
சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற
உள்ளனர்.
இதன் மூலம்,
அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும்அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்குஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர்.
தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து, பணிக்காக த்திருக்கின்றனர்.
ஆனால், அரசு பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. காலிப் பணியிடங் களை நிரப்ப, அரசு தயக்கம் காட்டுவதால், காலியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டு
தோறும் அதிகரித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்க ளும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்என,அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. தற்போதைய நிலையில், வருவாய், ஊரக வளர்ச்சி, வணிக வரி, சமூக நலம் என, அனைத்து துறை களிலும் சேர்த்து, 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலை யில், வரும் நிதி யாண்டில், ஒரு லட்சம் பணி யாளர்கள், ஓய்வு பெற உள்ளனர். இதனால், காலிப் பணியிடங் களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். அரசு, உடனடி யாக பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசுபணி கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அரசு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலை வர், தமிழ்ச்செல்வி கூறியதாவது:கடந்த, 1977 முதல், 1983 வரை, தற்காலிகமாக பணியில் சேர்க் கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், 1986ல், நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும் பாலானோர், அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். 1996ல், அரசு வெளியிட்ட அறிக்கை யின்படி, 1.86 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருந்தன. தற்போது, 2.50 லட்சம் பணியிடங்கள் காலி. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் பணியிடங்கள் வரை, காலியாகும் நிலை உள்ளது.
அரசு, உடனடியாக காலியிடங்களை நிரப்பா விட் டால், நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும். இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு, அரசு நிர்வாக குளறு படியே காரணம். உதாரணமாக, 100 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என் றால், அதில், 55 சதவீதம், நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும்.
மீதமுள்ள, 45 சதவீத பணியிடம்,பதவி உயர்வின் மூலமாகவும், கருணை அடிப்படையிலும் நிரப்பப் படும். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படு வதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் காலி யிடங்கள் அதிகரித்து வருகின்றன.வணிக வரித் துறை யில் மட்டுமே, பதவி உயர்வு மூலம், 3,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன. அதை நிரப் பாமல், காலியாகவே வைத்துள்ளனர். நியாயமான
முறையில், காலியிடங்களை நிரப்பாததால், பலர் நீதிமன்றம் செல்கின்றனர்.
நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், மேல் முறையீடு செய்கின்றனர். நிர்வாக ரீதியான பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது வழக் கம்; யாரும் நியமிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5 ஆண்டுகள் பணிசெய்தால் நிரந்தரம்!
தமிழக அரசு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர், ரவீந்தரன் கூறியதாவது:கடந்த, 1990 க்கு பின், பணி நியமனம் அதிகளவில் மேற் கொள்ளவில்லை. 1980களில் நியமிக்கப்பட்ட வர்கள், இன்று, 58 வயதை நெருங்கியுள்ளனர். 2017 - 18ல், ஓய்வு பெறுபவர் பட்டியலில் மட் டும், ஒரு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர்.
இப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுபவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தற் காலிக பணியாளர்களை, நிரந்தர பணியாளர் களாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...