'தமிழகம் முழுவதும், 301 இடங்களில், 'ஆதார்' உதவி மையங்கள், இன்று
முதல், பிப்., 28 வரை செயல்படும்' என, அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 339; தமிழ்நாடு மின்னணு
நிறுவனம் சார்பில், 206 என, மொத்தம், 545 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள்
செயல்படுகின்றன.ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, ஆதார் எண் அல்லது அட்டை
கிடைக்கப் பெறாதவர்கள்,
அட்டையை தொலைத்தவர்கள், தங்கள் ஆதார் எண்ணை தெரிந்து
கொள்ள, தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என, 301
இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள், இன்று முதல்,
பிப்., 28 வரை செயல்படும். அங்கு நேரில் சென்று, சிலவினாடிகளில் தங்களின்
ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
ஆதார் எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, 30 ரூபாய் கட்டணம்
செலுத்தி, பிளாஸ்டிக் ஆதார் அட்டை அல்லது 10 ரூபாய் செலுத்தி, காகிதத்தில்
அச்சிட்டு பெற்றுக் கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...