ரொக்கம் குறைவான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆதார்
தளத்தை பயன்படுத்தி பயோமெட்ரிக் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறை இன்னும் 2
வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி
தெரிவித்தார். டெல்லியில் நேற்று, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை
மேற்கொண்டவர்களுக்கு குலுக்கல் மூலம் பரிசு வழங்கும் டிஜிதன் மேளா
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செல்போன் நம்பரை
பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்யும் `பீம்' என்ற ஆப்
அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: டெபிட், கிரெடிட் கார்டு, இ வாலட் போன்ற
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளில் புதிதாக பயோமெட்ரிக் பரிவர்த்தனை
முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகமாக உள்ளது.
இந்த பயோமெட்ரிக் முறையில் நாம் நமது விரல் ரேகையை பதிவு செய்தால் போதும்,
வங்கிக் கணக்கில் இருந்து உரியவர்களுக்கு நாம் பணம் செலுத்த முடியும். இது
மிக பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை முறையாக இருக்கும். இதற்காக வங்கி கணக்கு
ஆதார் தளத்துடன் இணைக்கப்படும். நாட்டின் சொத்துக்களை சாப்பிட்ட எலிகளை
பிடிப்பதற்காக ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை மத்திய அரசால்
மேற்கொள்ளப்பட்டது.
இதனால் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...