வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடந்தது
வங்க கடலில் உருவான வர்தா புயல் இன்று மதியம் 3 மணியிலிருந்து
5 மணி வரைக்குள் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு
100 கி.மீ., - 120 கி.மீ., வரை வீசியது. தற்போது மணிக்கு 70 கி.மீ., - 85
கி.மீ., வரை வீசுகிறது. காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 50 கி.மீ.,
வேகத்தில் வீசும்.
2 நாட்களுக்கு மழை தொடரும்
அதிதீவிர வர்தா புயலானது, வலு குறைந்து புயலாக மாறி உள்ளது.
அது வலு இழக்கும். மழை படிப்படியாக குறையும். வட தமிழகத்தில் அடுத்த 2
நாட்களுக்கு மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் கனமழை
பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...