Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 முதல் 03.01.2017 பதிவு செய்து கொள்ள வேண்டும்

      மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 (திங்கட்கிழமை) முதல் 03.01.2017 (செவ்வாய்கிழமை) (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006 மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்தல் தொடர்பான செய்திக் குறிப்பு நடைபெறவுள்ள மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், 
இவ்வியக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 (திங்கட்கிழமை) முதல் 03.01.2017 (செவ்வாய்கிழமை) (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

 மேலும், பயிற்சி வகுப்பிற்கு பதிவுசெய்த பின்னர், மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்த பின்னர், மார்ச் 2017 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு 26.12.2016 (திங்கட்கிழமை) முதல் 04.01.2017 (புதன்கிழமை) வரை அறிவியல் பாடம் கருத்தியல் உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் (அனைத்து / தவறிய பாடங்கள்) அச்சேவை மையங்களின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்26.12.2016 முதல் 03.01.2017 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் மையம் போன்ற முழுவிவரங்களை அறிய அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive