🚨 இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து... 255 கட்சிகளை, இந்தியத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
🚨 இந்தப் பட்டியலில் இருக்கும் கட்சிகள், கடந்த 2005 முதல் 2015 வரை தன் கட்சி சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும் தேர்தலில் பங்கேற்கச் செய்யவில்லை. ஆகவே, நீக்கப்பட்ட அந்தக் கட்சிகள்... இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.
🚨 தேர்தல் ஆணையம், இந்தப் பட்டியலை... மத்திய நேரடி வரி வாரியத்துக்கு (CBDT) டிசம்பர் மாதம் 22-ம் தேதி அனுப்பியுள்ளது.
🚨 அத்துடன், அந்தப் பட்டியலில் இருக்கும் கட்சிகள் எதுவும் வருமானவரிச் சலுகைகள் பெறக் கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
🚨 தேர்தல் கட்டுப்பாட்டு வாரியத்தில்... அரசியலமைப்புச் சட்டம் 324-ன்படி, தேவையான அதிகாரங்களைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத கட்சிகளை நீக்கலாம். அதன்படி, 255 அரசியல் கட்சிகளைத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
🚨 இது தவிர, அந்தப் பட்டியலில் குறிப்பிடப்படாத மற்ற கட்சிகளின் பெயர்களும் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🚨 இந்தப் பட்டியலில் முதல் இடம் வகிப்பது டெல்லி. இங்குதான் 52 கட்சிகளின் பெயர்கள் உள்ளன. இதற்கடுத்து உத்தரப் பிரதேசம் (41), தமிழ்நாடு (39), மகாராஷ்டிரா (24) போன்ற மாநிலங்கள் உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...