பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதத்தில் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, இந்த மாதத்தில் இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 26 காசாகவும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 78 காசாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த முடிவை தற்போது ஒத்திவைத்துள்ளன. இந்த முடிவு ஒருநாள் அல்லது, இரண்டு நாட்கள் வரை இருக்கலாம் என்றும், பழைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுதிரும்ப பெறும் அறிவிப்பு, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடப்பது ஆகிய காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...