ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச சேவைகள் அடுத்த
ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த சேவைகள்
மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜியோவை எதிர்கொள்ள
போட்டி நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருவதால் ஜியோவும் தனது இலவச
சேவைக்கான வேலிடிட்டியை நீட்டிக்கலாம் என சந்தை வல்லுநர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
மற்ற போட்டி நிறுவனங்கள் 4ஜி சேவைகளின் விலையில் தொடர்ந்து
மாற்றங்கள் செய்து வருவதால் ஜியோ இலவசங்கள் மார்ச் 2017 என்ற காலக்கெடுவை
கடந்து மேலும் சில மாதங்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்படலாம் என
தொலைத்தொடர்பு சந்தை வல்லுநர் ராஜீவ் ஷர்மா தெரிவித்துள்ளார். ஏர்டெல்
நிறுவனத்தின் புதிய வாய்ஸ் திட்டங்கள் ஜியோ சலுகைகளை போன்றே
அமைந்திருக்கிறது என ஷர்மா தெரிவித்துள்ளார். ஜியோ சேவைகள் இன்னும் கட்டண
முறையில் துவங்கப்படாத நிலையில் ஏர்டெல் துவங்கியிருக்கும் இப்போட்டி மிக
விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரதி ஏர்டெல் அறிவித்த இரண்டு புதிய டேட்டா திட்டங்கள்
குறைந்த வருவாய் கொண்டிருக்கும் பயனர்களுக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. இதே
போன்ற திட்டங்கள் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களும்
அறிவித்திருக்கின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புதிய திட்டங்களை
பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவன
சேவைகள் அனைத்தும் ஜியோ இலவசங்கள் மார்ச் வரை நீட்டிக்கப்பட்ட பின்
அறிவிக்கப்பட்டது.
ஜியோவுடனான போட்டியை சமாளிக்க புதிய சேவை திட்டங்களை
அறிவித்திருக்கும் ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து
பெறும் லாபத்தின் அளவினை குறைத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள்
தெரிவித்துள்ளனர். 4ஜி சந்தையில் ஏற்பட்டிருக்கும் புதிய போட்டி நிலை
காரணமாக இந்திய 2ஜி பயனர்களில் பெரும்பாலானோர் ஆரம்பகால 4ஜி சேவைகளை
பயன்படுத்த துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...