தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, ஒரு லட்சம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை, கவலைக்கிடமாக உள்ளது. இது
தொடர்பாக, பல விதமான குழப்பமான தகவல்கள் வெளியாகி வருவதால், மாநிலம்
முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.'காவல் நிலையங்களில், ஒரு
சில போலீசார் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். மற்ற போலீசார், தங்கள்
காவல் நிலைய எல்லைகளில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும்'
என, போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விடுமுறை கிடையாது
ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, வாகனங்கள் தேவைப்பட்டால்,
வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும்அறிவுறுத்தப் பட்டுள்ளது.போலீசாருக்கு
விடுமுறை என்ற பேச்சுக்கு இடமில்லை. சிக்னல்கள், வணிக வளாகங்கள்,
ஓட்டல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிடப் பட்டுள்ளது.
தேவையின்றி, மக்கள் கூடினால், அவர்களை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்
பட்டுள்ளது.
சென்னையில், பாதுகாப்பு பணிகளுக்காக, கூடுதலாக, இரண்டு, ஐ.ஜி.,க்கள் களம்
இறக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதையும் போலீசார் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது,
கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள்,போலீசாருக்கு உத்தரவுகளை பிறப்பித்து
வருகின்றனர்.
மோடியிடம் விளக்கிய வெங்கையா
புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு
ஏற்பட்டது; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானதும்,
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சென்னை வந்தார்.ஜெயலலிதாவுக்கு
சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்
இருந்து வந்த டாக்டர்களிடம், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து
கேட்டறிந்தார். அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரையும்
அவர் சந்தித்தார்.இதன்பின், பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜெயலலிதாவுக்கு
அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...