புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகள்
விதித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கைவிடுதிகளுக்கு
போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்கள் மற்றும்
கேளிக்கை விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் மது, உணவு விற்பனை செய்ய
கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு
வாகனங்களின் விவரம் பதிவு செய்யப்படும் என்றும், நீச்சல் குளித்தின் மீதோ அல்லது அதன் அருகிலோ தற்காலிக மேடை அமைக்க கூடாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
விருந்து நிகழச்சியில் பங்கேற்கும் வெளிநாட்டினரின் விவரங்களை சரி
பார்க்கவும், விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும்
பொழுதுபோக்கு இடங்களில் புத்தாண்டு கொண்டாட டிசம்பர் 31-ம் தேதி சிறப்பு
உரிமம் வழங்கப்படும் என்றும், புத்தாண்டு கொண்டாட விண்ணப்பிப்போருக்கு மாலை
6 மணி முதல் இரவு 1 மணி வரை சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்றும் போலீசார்
தெரிவித்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட இடங்களை இடங்களை தவிர வேறு இடங்களில் மது விற்பனை செய்தால்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விரும்பதகாத முறையில்
கேலி, கிண்டல்கள் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடுபம் என்றும்
சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில்
பட்டாசு வெடிக்க கூடாது என்றும், பைக், கார்களை வேகமாக ஓட்டக்கூடாது
என்றும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மூலக்கதை படிக்க" - நள்ளிரவு 1 மணிக்கு மேல் மது, உணவு விற்பனை செய்ய கூடாத.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...