Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு என்பதை ஏற்க மறுப்பு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு!!

      சென்னை, 1998-99-ம் ஆண்டுக்கு பின்னர் சொத்து வரியை உயர்த்தாததால் ரூ.1,841 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறுவதை ஏற்க முடியாது என்றும் உண்மையில் இந்த இழப்பு தொகை பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறி, இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி என்.கிருபாகரன்

உத்தரவிட்டுள்ளார்.சொத்து வரிசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில், ‘தங்களது கடைகளுக்கு 1996-ம் ஆண்டு முதல் சொத்து வரி நிர்ணயம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 1996-ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடை வைத்திருப்பவர்கள் சொத்து வரி செலுத்தவில்லை என்றால், அவர்களது கடைக்கு ‘சீல்’ வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.இழப்பு எவ்வளவு?பின்னர், 1998-99-ம் ஆண்டு சொத்து வரியை சென்னை மாநகராட்சி உயர்த்தியது. அதன்பின்னர், ஏன் சொத்து வரியை உயர்த்தவில்லை? வரியை உயர்த்தவேண்டும் என்று மாநகராட்சியின் மாமன்றத்துக்கு அதிகாரிகள் ஏன் பரிந்துரை செய்யவில்லை? 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரியை உயர்த்த வேண்டும் என்ற விதி உள்ளது. அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, 2002, 2006, 2010, 2014 என்று 4 முறை வரியை உயர்த்தியிருக்க வேண்டும். அவ்வாறு வரியை உயர்த்தாததால், மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது? என்ற விவரங்களை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு, நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.அரசாணைஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-சென்னை மாநகராட்சி 1993-1994-ம் ஆண்டுக்கு பின்னர், 1998-1999-ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்தியது. இதன்பின்னர் தமிழகம் முழுவதுமுள்ள உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மாற்றியமைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி அரசாணை பிறப்பித்தார். இதன்பின்னர், வீடுகளுக்கு 25 சதவீதமும், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் சொத்து வரியை உயர்த்தவேண்டும் என்று 2008-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி மற்றொரு அரசாணையையும் அவர் பிறப்பித்தார்.வரி உயர்த்தவில்லைஇந்த அரசாணைகளின்படி சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிலைக்குழுவுக்கு (வரி மற்றும் நிதி) அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். ஆனால், வீடுகளுக்கு மட்டும் 5 முதல் 10 சதவீத வரியை உயர்த்தி கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.வணிக கட்டிடம், தொழிற்சாலைகளுக்கு சொத்து வரியை உயர்த்தவில்லை. இதன்பின்னர் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரியை உயர்த்த கோரி 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி மீண்டும் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரையை உடனே ஏற்க தேவையில்லை. சொத்து வரியை பின்னர் உயர்த்திக் கொள்ளலாம் என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.ரூ.1,841 கோடி இழப்புஅதனால் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட சொத்து வரியையே வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2002, 2006, 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் முறையாக சொத்து வரி உயர்த்தப்படாததால், மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்கிடப்பட்டது. அதாவது, 1993-94 ஆண்டில் இருந்து 1998-99 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட வரியின் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அதன்படி பார்த்தால், ரூ.1,841 கோடி வருவாய் சென்னை மாநகராட்சிக்கு கிடைத்திருக்கும். சொத்து வரியை மாற்றியமைக்காததால் மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.அடிப்படை வசதிகள்இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி கடும் அதிர்ச்சியடைந்தார். பின்னர், ‘சொத்து வரியை உயர்த்தாததால், இவ்வளவு பெரிய தொகை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருமானம் கிடைக்கவில்லை என்றால், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி எப்படி செய்து கொடுக்கும்? மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் (கல்யாண மண்டபம்) மார்க்கெட், பொதுக்கழிப்பிடம் ஆகியவைக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.பின்னர், சொத்து வரியை உயர்த்தாததால், ரூ.1,841 கோடி இழப்பு என்று மாநகராட்சி ஆணையர் கூறுவதை ஏற்க முடியாது. அவர், வீடு, தொழிற்சாலை, வணிக கட்டிடங்கள் என்று தனித்தனியாக பிரித்து கணக்கிடவில்லை. அவ்வாறு கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவரும். எனவே, இதுகுறித்து தனித்தனியாக கணக்கிட்டு விரிவான அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கிறேன்‘ என்று உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive