மும்பை, மும்பையில் 172 மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி
நாப்கின் எந்திரங்களை வைக்க மாநகராட்சி ரூ.1 கோடியே 93 லட்சம் நிதி
ஒதுக்கீடு செய்து உள்ளது.
தானியங்கி நாப்கின் எந்திரம்மும்பை மாநகராட்சியின் கீழ் 1,000–க்கும் அதிகமான பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. இதில், 100–க்கும் அதிகமானவை உயர்நிலை பள்ளிகள்
ஆகும். இதேப்போல மாநகராட்சி உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
மாநகராட்சி சார்பில் ஏற்கனவே மாணவர்களுக்கு கையடக்க கணினி உள்ளிட்ட பல
கல்வி உபயோக பொருட்கள் வழங்கப்படுகின்றன.இந்தநிலையில் மாநகராட்சி
பள்ளிகளில் மாணவிகளின் வசதிக்காக தானியங்கி நாப்கின் எந்திரங்களை வைக்க
மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ரூ.1.93 கோடி ஒதுக்கீடு
இந்த திட்டத்திற்கு மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் அளித்தது.
முதல் கட்டமாக நாப்கின் தானியங்கி எந்திரங்கள் 172 மாநகராட்சி பள்ளிகளில்
வைக்கப்பட உள்ளன. மாணவிகள் அதில் இருந்து தேவையான நாப்கின்களை எடுத்து
கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடியே 93 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளே
படிக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் நாப்கின் பயன்படுத்துவதில்லை.
எனவே ஏழை மாணவிகளும் நாப்கின் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த
திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...