பதினைந்து கோடி ருபாய் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு
நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்தார்.
உடல்நலக் குறைபாடு காரணமாக இரண்டரை மாதங்களாக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் மரணமடைந்தார். மறுநாள் மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு பதினைந்து கோடி செலவில் நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தகவல் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...