மதுரை ஐகோர்ட்டு கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் இயங்கும்
குழந்தைகள் காப்பகங்கள் தொடர்பான வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் லால்வினா, சமூக நலத்துறை இயக்குநர் அமுதவள்ளி உள்ளிட்டோர் ஆஜராகி தெரிவித்த தகவல்கள் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனுமதிக்காக விண்ணப்பித்து இருக்கும் காப்பகங்களின் மனுக்களை 4 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும். அனுமதி இல்லாமல் இயங்கும் 90 காப்பகங்களை மூட வேண்டும். இந்த காப்பகங்களில் உள்ள 5 ஆயிரம் குழந்தைகளை அரசு காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும்.
சட்ட விரோத காப்பகங்களை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொட்டில் குழந்தைகளில் பெண் குழந்தைகளே அதிகம் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இந்த நிலை மாறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...