Home »
» 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் பயிலும்
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு
கட்டாயமாகிறது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பொதுத்
தேர்வையோ அல்லது பள்ளி அளவிலான தேர்வையோ தேர்வு செய்துகொள்ளலாம் என்ற நிலை
தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அனைத்து மாணவர்களையும்
போல், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் 10-ஆம் வகுப்பு
மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்துவதை கட்டாயமாக்குவதற்கு மனித வள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடந்த மாதம் ஆதரவு
தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் சிபிஎஸ்இ நிர்வாகக் குழுக் கூட்டம், தில்லியில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ஆம்
வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற
முடிவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்ததாக மத்திய
அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த முடிவை அமல்படுத்துவதற்கு முன்பாக, மத்திய அரசு ஒப்புதல் அளித்தாக
வேண்டும்
10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமானால், 80 சதவீத மதிப்பெண்கள்
பொதுத் தேர்வு அடிப்படையிலும், 20 சதவீத மதிப்பெண்கள் பள்ளி அளவிலான
மதிப்பீட்டின் அடிப்படையிலும் வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
தற்போது, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஹிந்தி, ஆங்கிலம், நவீன
இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அதை 9 மற்றும் 10-ஆம்
வகுப்புகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகக் குழு
பரிந்துரை செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...