டில்லி, ஆக்சிஸ் வங்கி கிளையில், 44 போலி கணக்குகளில், 100 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் செல்லாது என, நவ., 8ல் அறிவித்தது. செல்லாத நோட்டுகளை, வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய, டிச., 30 வரை, அவகாசம் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லி, சாந்தினி சவுக் பகுதியில் உள்ள, ஆக்சிஸ் வங்கி கிளையில், போலி கணக்குகளில், பல கோடி ரூபாய் டிபாசிட் செய் யப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அந்த கிளையில், வருமான வரி அதிகாரிகள்,
நேற்று, அதிரடி சோதனை நடத்தினர். வங்கி கிளை யில், 44 போலி கணக்குகள் பராமரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கணக்குகளில், 100 கோடி ரூபாய், செல்லாத நோட்டுகள், டிபாசிட் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
நவ., 8ம் தேதிக்கு பின்,இந்த வங்கி கிளையில், 450 கோடி ரூபாய் மதிப்பு செல்லாத நோட்டுகள், டிபாசிட் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள் ளது. போலி ஆவணங்கள் தந்து, 44 கணக்குகளும் தொடங்கப் பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.76 லட்சம் பறிமுதல் :
குஜராத் மாநிலம், சூரத்தில், போலீசார், நேற்று காலை, வாகன சோதனை யில் ஈடுபட்டனர், மஹா ராஷ்டிரா மாநில பதிவு எண் உடைய காரை சோத னையிட்டதில், 76 லட்சம் ரூபாய் மதிப்பு டைய, 2,000 ரூபாய் கட்டுகள் சிக்கின. காரில் இருந்த, ஒரு பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம்,மும்பையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், 85 லட்ச ரூபாய் மதிப்புடைய, 2,000 ரூபாய் நோட்டுகளுடன், ஒருவன் கைது செய்யப்பட்டான்.
854 கிலோ தங்கம் பறிமுதல் :
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - அக்டோபர் வரை,
வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட, 854 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.
லோக்சபாவில், நிதித்துறை இணை அமைச்சர், சந்தோஷ்குமார் கங்வார் அளித்த பதில்:
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - அக்டோபர் வரை, மியான்மர்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,தாய் லாந்து நாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 854 கிலோ தங்கத்தை, சுங்க அதிகாரிகள் கைப் பற்றியுள்ள னர்.
2014 - 15ம் நிதியாண்டில் 4,035 கிலோ தங்கமும், 2015 - 16ம்நிதியாண்டில், 2,976 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...