திருப்பூர் அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர்,
வகுப்பறைக்குள் செல்போனை பயன்படுத்தி வந்த செய்தி வெளியாகி பெரும்
பரபரப்புக்கு உள்ளானது.
இதனை அடுத்து, இனி பள்ளிக்கு செல்போன்
எடுத்துவரக்கூடாது எனவும் மீறி எடுத்து வந்தால் அந்த போனை தலைமை
ஆசிரியரிடம் ஒப்படைத்தப் பிறகே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்' எனவும்
அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனை
அடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில்,
ஆசிரியர்கள் இனி நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும்; வகுப்பு
நேரங்களில் அமர்ந்து பாடம் நடத்தக்கூடாது எனவும், உட்காரவேண்டிய தேவை
இல்லாததால் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலிகளை
அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். " உடல்
நலப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், மாதவிடாய் காலங்களில் இருக்கும்
ஆசிரியைகள் என பலரும் இதனால் பாதிக்கப்படுவர். ஏனெனில், ஒரு பாடவேளை என்பது
45 நிமிடங்கள் ஆகும். 45 நிமிடங்களும் ஆசிரியர்கள் நின்று கொண்டே பாடம்
நடத்தினால், ஒவ்வொரு பாடவேளைக்கும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்
என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தாலே நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் சராசரியாக
எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பது தெரியும். இது மனிதநேயமற்ற செயல்" என
ஆசிரியர்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.
கண்டிப்பாக நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும். அதை மனிதநேயமற்ற செயல் என்று கூறும் சிலர் தம்மை ஆசிரியர் என்று கூறுவதையும் தவிர்த்து கொள்ளலாம்.
ReplyDeleteஓரிரு வேளைகளில் உடற்நல குறைவின் காரணமாக அமர்வதை யாரும் குறை கூறவில்லை.
அமர்ந்து கொண்டு பாடம் நடத்துவது பாவத்தைச் சேர்ப்பதற்கு சமம்.
நாம் ஆசிரியர் என்பதை மறக்க வேண்டாம்.
அனைவருக்கும் வணக்கம். நான் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். மேலும் 32 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றுகிறேன். இப்போதும் பாடங்களை நின்று கொண்டுதான் நடத்துகின்றேன். ஆனாலும், படிக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட மாணவர்கள் என் வகுப்பில் அதிகம். அதனால் மனதளவிலும், உடல் ரீதியாகவும் சற்று சோர்வு ஏற்படுகிறது். இப்போது நான் என்ன செய்ய முடியும்? மேலும், எனக்கு கிடைக்க வேண்டிய 30 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றியதற்கு ஒரு ஊதிய உயர்வு, 01-10-2015, 01-10-2016 - க்கு இரண்டு ஊதிய உயர்வுகள் கிடைக்க வேண்டியிருந்தும் நான் படித்த பள்ளிக்காக இன்னும் நன்முறையில் உழைக்கின்றேன். கடின உழைப்பால் நல்லாசிரியர் விருது பெற்ற எனக்கு கல்வித்துறை அந்த மூன்று ஊதிய உயர்வுகளை உடனடியாக வழங்க கோரிக்கைகள் வைத்தும் இன்னும் வழங்கவில்லை. நின்று கொண்டு பாடம் எடுப்பது தான் சாலச் சிறந்தது. ஆனாலும் எல்லோருக்கும் இது பொருந்தாது.
Deleteகண்டிப்பாக நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும். அதை மனிதநேயமற்ற செயல் என்று கூறும் சிலர் தம்மை ஆசிரியர் என்று கூறுவதையும் தவிர்த்து கொள்ளலாம்.
ReplyDeleteஓரிரு வேளைகளில் உடற்நல குறைவின் காரணமாக அமர்வதை யாரும் குறை கூறவில்லை.
அமர்ந்து கொண்டு பாடம் நடத்துவது பாவத்தைச் சேர்ப்பதற்கு சமம்.
நாம் ஆசிரியர் என்பதை மறக்க வேண்டாம்.
எல்லோரும் எல்லா வேளைகளிலும் நின்று கொண்டு பாடம் நடத்த தேவையில்லை. முடியாது. அது மனிதநேயமற்ற செயல்.
ReplyDeleteதொடர்ந்து மூன்று பாடவேளைகள் எடுக்க நேர்ந்தால் 2 1/4 மணி நேரம் ஆகும்.

ReplyDelete