Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET தீர்ப்பு இரண்டு அரசாணைகளும் செல்லும்

தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிர தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதீமன்றத்தின் தீர்ப்பும் ரத்தாகிறது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு நகல்:

தீர்பின் நகல் மாலை கிடைக்கும்.கிடைத்தவுடன் நமது கல்விச்செய்தியில் வெளியிடப்படும்.




10 Comments:

  1. மதிப்பிற்குரிய நண்பர்களே!
    ஆதி திராவிட பள்ளி அனைத்து பணி இடங்களும் நிரப்பப்பட்டதா?
    (இடைநிலை ஆசிரியர்கள்)

    ReplyDelete
  2. So what weightage is required now??? when they process the posting???

    ReplyDelete
  3. தீர்ப்பு நகல் கிடைத்து விட்டது... அடுத்த வாரம் மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்யப்பட்டது...

    அடுத்த வாரம் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்

    ReplyDelete
    Replies
    1. If cases continue like this most people will reach retirement age before the TET exam is conducted.

      Delete
    2. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் அரசு தகுதி தேர்வு நடத்தவும் இல்லை. புதிய பணி நியமனம் செய்யவில்லை. நீங்கள் மேலும் வழக்கு போட்டால் அதை சாக்காக வைத்து கொண்டு அரசு ஆசிரியர் பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்திக்கொண்டு செல்லும்.

      Delete
  4. விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு.,நவம்பர் அல்லது டிசம்பர் மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகவுள்ளது... கல்விதுறை அமைச்சர் தகவல்,.

    ReplyDelete
  5. Pass anavanga nilamai Enna sir

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பாஸ் ஆணவங்களுக்கு posting செய்து விட்டு தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும்

      Delete
  6. Kanneer anjaliyana valķkai en sabam summavidathu....kasttapattu padichi 60%eduthum job iĺlai thuuu ithalam oru govt..velai kodu...valkai kodu govt...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive