Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் இனி எப்படி தேர்ந்தெடுக்க போகிறார்கள்?

             ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும் பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவி வருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.


               எனவே தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பற்றி எடுத்துரைக்க இந்த கட்டுரையை நண்பர்களுக்கு வெளியிடுகிறோம்.  ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது இந்திய அரசின் மூலம் இயற்றபட்ட கட்டாய கல்விச்சட்டப்படி இத்தேர்வு எழுதுவது ஆசிரியர்களுக்கு  கட்டாயம். இதனை தமிழக அரசு நேரடியாக கொண்டுவரவில்லை ஒரு சில மாநிலங்களை தவிர்த்து அனைத்து  மாநிலங்களிலும் இவை நடைமுறையில் உள்ளது. எனவே NCERT விதிகள் படி ஆசிரியர் தகுத்தேர்வு நடைபெறுகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் வெயிட்டேஜ் மற்றும் மதிப்பெண் தளர்வு போன்றவற்றை அறிவித்துள்ளது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதை நீங்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தெரியும். 

 தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் இனி தேர்ந்தெடுக்கும் முறை

       தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்து வந்த பாதை அனைவரும் அறிந்ததே வெயிட்டேஜ் முறை மற்றும் மதிப்பெண் தளர்வு குறித்த இரு வேறு வழக்கில் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வேறு வேறு திர்ப்பை வழங்கியதால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை உண்டு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு உண்டு அதாவது  82 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்று தமிழக அரசு அறிவித்த GO Ms. 71 மற்றும் GO Ms. 25 ஆகிய அரசாணைகள் செல்லும் இதன் மூலம் 2013 ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 55% மதிப்பெண் பெற்றால் போதும் என்று உச்சநீதிமன்றம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு எடுக்கும் முடிவே இறுதி எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

குழப்பம்
           தற்போது விகடன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கடந்த தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் மூலம் ஆசிரியர் தேர்வு செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்த பேட்டி அளித்தவரை தொடர்பு கொண்டபோது என செய்தி வெளியிட்டுள்ளனர். எனவே இவை ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அளித்த பேட்டி இல்லை மேலும் இவை அதிகாரபூர்வ தகவல் இல்லை  அதாவது 55% மதிப்பெண் தளர்வு  கொண்ட GO Ms.25 அரசாணை தற்போது நடைமுறையில் உள்ளது வேறு எந்த புதிய அரசாணையும் இல்லை இது குறித்து அதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவே குழப்பம் தேவையில்லை 82 மதிப்பெண்  மேல் 2013 ல் பெற்றவர்கள்  தேர்ச்சி பெற்றவர்களே என்பதில் எந்த சந்தேகமும் குழப்பமும் தேவையில்லை... இனி வரும் தேர்வுக்கும் 55% மதிப்பெண் போதும்.

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு 
இன்னும் ஒரு வாரம் அல்லது இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அறிவிப்பு வரும் அதில் 55% (82) மதிப்பெண் பெற்றால் போதும் என்றே அறிவிப்பு வரும் என்பதை எதிர்பார்க்கலாம் மேலும் வெயிட்டேஜ் உண்டு இவை நீதிமண்றங்களின் உத்தரவுப்படி வெளியிட்டுள்ளதால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை. நவம்பர் மாதத்துடன் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் விரைவில் அறிவிக்கபடலாம் கேள்வித்தாள் மிக எளிமையாக அமைய வாய்ப்பு உள்ளதால் அதிக மதிப்பெண் பெற முயற்சிக்கவும். தற்போது இருந்தே படிக்கவும்.

இப்படிக்கு
கார்த்திக் பரமக்குடி







13 Comments:

  1. Positing poduvanga la ellaya

    ReplyDelete
  2. கார்த்தி வெய்ட்டேஜை பொருத்தவரை இதை பரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது பொருத்திருந்து பார்ப்போம் இன்று நான் அமைச்சருக்கு கடிதம் எழுதப்போகிறேன் பதில் வந்தால் தெரிந்து விடும் மேலும் இன்னும் ஒருவாரத்தில் உங்களுக்கு சில செய்திகளை மெய்ல் செய்கிறேன்

    ReplyDelete
  3. Nandri sir ippo ullatai kurukirean ethir kaalarhil maralam

    ReplyDelete
  4. sir 87 mark eduthavangaluku job kedaikuma

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  5. 82-89 eduthavangaluku erkanave posting potu irukangala appo mathavangalumkum job venumnu ondru sernthu poraduvom

    ReplyDelete
  6. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir intha letter ah apdiye amma ku anupi vainga elorum 5% relaxation people elorum sernthu poraduvom

      Delete
  7. Dear sir any vacancies if they select be old marks are new marks

    ReplyDelete
  8. Sir certificate vangala. Plz ena pandradhunu solunga

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive