Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 32

* சூரியன் உதிக்கும்போதும், சூரியன் மறையும்போது வானம் சிவப்பாகத் தோன்றக் காரணம் - சிவப்பு ஒளி குறைவாக சிதறுவதே.

* ஒரு லென்சின் திறன் அலகு - டயாப்டர்
* மின்மாற்றியின் திறனாவது - வெளிவிடும் ஆற்றல்/உள்ளிழுக்கும் ஆற்றல்
* கார்பன் 14-ன் அரை ஆயுட்காலம் - 5700 ஆண்டுகள்
* பைரோ மீட்டர் ---- விதியின் அடிப்படையில் வேலை செய்கிறது - பிரீராஸ்ட்டின் வெப்பம் மாற்றுத் தத்துவத்தின் வீணை காற்றுக் கருவியல்ல
* கடிகாரம் பழுதுபார்ப்பவர்களும், கைரேகை பார்ப்பவர்களும் எவ்வகை லென்சை பயன்படுத்துகின்றனர் - எளிய லென்சு
* அண்மையில் உள்ள பொருட்களை மட்டுமே தெளிவாகக் காண முடிந்து, தொலைவிலுள்ள பொருட்களைத் தெளிவாகக் காண இயலாத நிலை - கிட்டப்பார்வை என்று பெயர்.
* ஒளியாண்டு எதனை அளவிடப் பயன்படுகிறது - தூரத்தை
* மூடிய ஆர்கன் குழாயின் மூடிய முனையில் ------- திறந்த முனையில் ----- ஏற்படும் - கணுவும், எதிர்க்கணுவும்.
* ஒலி ----- வேகமாகச் செல்லும் - அதிர்வெண் அதிகமானால்
* காந்தத்தின் முனைகளுக்கு அருகே காந்த விசைக் கோடுகள் நெருக்கமாக இருக்கும்.
* ஒலியின் அதிர்வெண் அதிகரிக்கும்போது, திசைவேகம் - அதிகரிக்கிறது.
* அலைநீளத்தின் அலகு - மீட்டர்
* சந்திரனில் புவியீர்ப்பு விசையானது பூமியைவிட எத்தனை மடங்கு குறைவு - ஆறில் ஒரு பங்கு
* திரவமானிகள் அமைப்பதில் பயன்படும் விதி - மிதத்தல் விதி
* எந்திரங்களின் திறன் பொதுவாக குதிரைத் திறன் (HP) என்ற அலகால் அளக்கப்படுகிறது.
* திசைவேகம் என்பது - அதிர்வெண் X அலை நீளம்
* ஒலி அலை ஒரு நெட்டலை அலையாகும்.
* பார்வையற்றோர் படிக்கும் எழுத்து முறையை கண்டறிந்தவர் - லூயிஸ் பிரெளலி
* பாலில் கொழுப்புச்சத்து குறைவாக காணப்படுவது - குளிர் காலத்தில்
* அணுக்கருவின் அமைப்பு மற்றும் தன்மை அறிய பயன்படுவது - காமாக் கதிர்கள்
* கடலின் ஆழத்தை அளக்கப் பயன்படும் கருவி - ஃபாதோ மீட்டர்
* நாம் சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றலை எம்முறையில் பெறுகிறோம் - கதிர்வீச்சு
* ஒரு பொருளின் எடை என்பது அதன் நிறை மற்றும் புவியீர்ப்பு விசையால் மேற்படும் முடுக்கம் ஆகியவற்றின் பெருக்குத் தொகைக்கு சமம்.
* எபிடியாஸ்கோப் பயன்படுவது - திரையில் படம் காட்ட.
* 1HP 746 வாட்டிற்குச் சமம்.
* ஒளி என்பது ஒருவகை ஆற்றல்
* தண்ணீரை பின்னுக்குத் தள்ளும்போது, படகு முன்னோக்கி நகருகிறது. இதை விளக்க பயன்படும் விதி - நியூட்டனின் மூன்றாம் விதி
* ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்றுவதற்கு - ஒர் உயர் மின் தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும்.
* தொலைநோக்கியும், நுண்ணோக்கியும் மாறுபடும் விதம் - தொலைநோக்கியில், பொருளருகு லென்சின் குவியத் தொலைவைவி கண்ணருகு லென்சின் குவியத் தொலைவு அதிகம்.
டெசிபல் என்பது - ஒலிச்செறிவுக்கான அலகு
* சோக் (CHOKE) பயன்படுத்தப்படுவதன் நோக்கம் - மாறுதிசை மின்சுற்றில் மின்னோட்ட வலிமையை குறைக்க
* முழு கரும்பொருள் என்பது - எல்லா அலைநீள கதிரியக்கத்தையும் உள்ளிழுத்து வெளியிடும்.
* கூட்டு நுண்ணோக்கி பயன்படும் துறை - மருத்துவத் துறையில்
* ஒரு பொருள் தனிச்சுழி வெப்பநிலையில் மட்டுமே கதிர்வீச்சு ஆற்றல் உமிழ்வதை நிறுத்தும்.
* அழுத்தம் அதிகரித்தால் கொதிநிலை அதிகரிக்கும் என்ற தத்துவம் பிரஷர் குக்கரில் பயன்படுகிறது.
* மனித உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது இரத்தத்தின் பாகியல் எண் மதிப்பு குறைகிறது.
* பாதரசம் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்பட முக்கிய காரணம் - குறைந்த தன் வெப்ப ஏற்புத்திறன்.
* பனிக்கட்டியுடன் உப்பைச் சேர்க்கும்போது அதன் உருகுநிலை குறைகிறது.
* வெவ்வேறு திரவங்கள் வெவ்வேறு அளவில் பருமப்பெருக்கம் அடைகின்றன.
* நிலை மாற்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் வெப்பம் - உலர்மறை வெப்பம்.
* சூடான காற்ரு சாதாரணக் காற்றைவிட லேசானது.
* ஒரு இயக்கும் குளிர்பதனி மூடிய அறையில் வைக்கப்படும்போது அறையின் வெப்பநிலை உயரும்.
* பருமன் மாறாத போது வாயுவின் வெப்ப நிலை அதிகரித்தால் அது அழுத்தப் பெருக்கம் அடைகிறது.
* ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருட காலத்தில் பயணிக்கும் தொலைவு.
* ஒளியின் தீவிரத்தை (Intensity) அளக்க உதவும் கருவி - கான்ட்லா.
* கண்ணுக்கு சுகத்தைக் கொடுக்கும் நிறம் - மஞ்சள்.
* ஒளியைக் குறித்த படிப்பு -  Optics
* ஒளி வெற்றிடத்தில்தான் மிக அதிக வேகத்தில் பாயும்.
* குவாண்டம் சித்தாந்தத்தை வெளியிட்டவர் - மாக்ஸ் பிளாங்
* ஒளியின் அடிப்படை நிறங்கள் - பச்சை, சிவப்பு, நீலம்
* மின்மினிப்பூச்சிகள் இரவில் ஒளி சிதற அதன் உடலில் உள்ள லூஸிஃபெரின் என்ற வேதிப்பொருளே காரணம்.
* ஒளியலைக்கொள்கையை கண்டுபிடித்தவர் - கிறிஸ்டியன் ஹைகன்ஸ்
* வானவில்லின் மேற்பகுதியில் காணப்படும் நிறம் - சிவப்பு
* ஆப்டிகல் பைபரில் பயன்படும் தத்துவம் - முழு அக எதிரொளிப்பு.
* வானவில் உருவாகக் காரணமான நிகழ்வு - நிறப்பிரிகையும் முழு அக எதிரொளிப்பும்.
* பொருள்களின் ஒளிவிலகல் எண்ணைக் காணப்பயன்படுவது - நிறமாலைமானி.
* தொலை நகலியினால் (Fax) அனுப்ப வேண்டிய ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை - வரிக்கண்ணோட்டம்.
* சூரிய அடுப்பில் பயன்படுவது - குழி ஆடி.
* ஒளிச்செறிவின் அலகு - கேண்டிலா.
* ஒளிவிலகலின் போது ஒளியின் திசையில் மாற்றம் ஏற்படும்.
* ஒளியின் திசைவேகத்தை முதன் முதலில் வெற்றிகரமாக கணக்கிட்டவர் - ரோமர்.
* இரு இணையான சமதள ஆடிகளுக்கு இடையிலுள்ள பொருளின் பிம்பங்களின் எண்ணிக்கை - எண்ணில்லாதது.
* நீரின் ஒளிவிலகல் எண்: 1.33. ஒளிவிலகல் எண் : 2.42.
* இந்த பிரபஞ்சத்தின் மிக அதிகமாகக் காணப்படும் வாயு - ஹைட்ரஜன்.
* காற்று மண்டலத்தில் மிக அதிகமாக காணப்படும் வாயு - நைட்ரஜன்
* சிரிப்பூட்டும் வாயு என்பது - நைட்ரஜன் ஆக்ஸைடு.
* ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் ஆக்சிஜனை வெளிவிடுகின்றன.
* மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைந்ததே ஒஸோன்.
* தண்ணீரில் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய வாயு - குளோரின்
* போபால் விஷவாயு விபத்தில் வெளியேறிய வாயு - மீதைல் ஐசோசோ சயனைட்
* இயற்கை எரிவாயுவில் பெரும்பான்மையாக அடங்கியிருப்பது - மீத்தேன்.
* ஆக்சிஜனைக் கண்டுபிடித்தவர் - ஜோசப் ப்ரீஸ்ட்லி
* கார்பன்-டை ஆக்சைடைக் கண்டுபிடித்தவர் - ஜோசப் பிளாக்.
* புறவிசை செயல் படாதவரை ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருக்கும் என்பது - நியூட்டன் விதி.
* பொருளின் நிலைமைப்பண்பு அதன் நிரையைப் பொறுத்தது.
* மேலிலிருந்து ஒருபொருள் தானாக கீழே விழும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கும்.
* இயங்கும் பொருளின் உந்தம் நிறையையும், திசைவேகத்தையும் சார்ந்தது.
* புவியின் விடுபடு திசைவேகத்தின் மதிப்பு - 11.2 கி.மீ/வி
* துருவப்பகுதியில் புவியின் ஆரம் குறைவாக இருப்பதால் அங்கு புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு அதிகம்.
* மூன்று வகை அலைகள்: இயந்திரவியல் அலைகள், மின்காந்த அலைகள் மற்றும் பருப்பொருள் அலைகள்.
* ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலைபரவும் போது அலை நீளமும், திசை வேகமும் மாறும்.
* ஒரு பொருள் எந்த நிலையிலிருந்தாலும் அதன் எடை முழுவதும் ஒரு புள்ளியின் வழியேதான் செயல்படுகிறது.
* அதிகத் திசை வேகத்தோடு புவியின் வளி மண்டலத்தின் நுழையும் பொருள் தீப்பிடித்து எரியக் காரணம் - காற்றின் பாகுநிலை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive