குரூப்
1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய
அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:-
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்பு தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...