:'கடந்த, 7, திங்கட்கிழமை, ரிசர்வ் வங்கியிடமிருந்து அழைப்பு.
அனைவரும் சென்றோம். 'டபுள்லாக்' செய்யப்பட்ட பெட்டிகள் அனைவருக்கும்
ஒப்படைக்கப்பட்டு, 'நாங்கள் சொல்லும் வரை, இவற்றைத் திறக்கக் கூடாது;
யாரிடம் சொல்லவும் கூடாது' என, அறிவுறுத்தல்; அலுவலகம் திரும்பினோம்.
'அடுத்த நாள், அதாவது, 8ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முன்பாக, மறுபடி
ரிசர்வ் வங்கியிட மிருந்து அழைப்பு, உடனடியாக அங்கு வரும் படி... சரியாக,
7:00 மணிக்கு அங்கு கூடினோம்.
8:00 மணி வரை, நெருக்கடியில் சிக்கியுள்ள சொத்துக்களை, நிலையான கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான விவாதங்களை நடத்தினோம்.
அறிக்கை
'திடீரென, 8:00 மணிக்கு, ரிசர்வ் வங்கி அதிகாரி கள், 'டிவி'யை, 'ஸ்விட்ச்
ஆன்' செய்து, அனைவரையும் கவனமாக அந்த ஒளிபரப்பைக் கேட்குமாறு கூறினர்.
அது... எங்கள் யாருக்கும் தெரியா மல் ரகசியம் காக்கப்பட்ட, நாங்கள் யாருமே
எதிர்பாராத, பிரதமர் நரேந்திர மோடி யின் பேச்சு!- இப்படிச் சொல்கின்றனர்,
வங்கி களின் நிதி நிர்வாகப் பிரிவுத் தலைவர்கள். பிரதமர் மோடியின் உரையால்
அதிர்ச்சி அடைந்தது பொதுமக்கள் மட்டுமல்ல; வங்கி தலைவர்கள் கூட!
ஏன் தெரியுமா?
ஆறு மாதத்திற்கு முன்பே, பிரதமர் மோடி இத் திட்டத்தை வரையறை செய்து
விட்டார். அப்போதே, ரிசர்வ் வங்கி மூலம், வங்கிகளுக்கு ஒரு அறிக்கை
சமர்ப்பித்ததாகச் சொல்லப் படுகிறது.
அதாவது, வங்கி, ஏ.டி.எம்.,களில், 100 ரூபாய் தாள்களையே நிரப்பி வைக்க
வேண்டும் என, சொல்லப்பட்டிருந் தது; இதை வங்கிகள் பின்பற்றினவாஎன,
தெரியவில்லை.
அதன்பின், பிரதமரின் செயல்கள் வேகமெடுத்தன. படிப்படியாக வேலைகள் நடக்கத்
துவங்கின. இவை அனைத்தும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதித் துறையில் மிகச்
சிலர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதியமைச்சர்
அருண் ஜெட்லி ஆகியோருக்கு மட்டுமே, தெரியும்.எல்லா வழிமுறைகளையும்
நிதானமாய் வகுத்து, 2,000 ரூபாய்க்கான டிசைனை வடிவமைத்தனர். மூன்று
மாதத்திற்கு கரன்சி அச்சிடப்பட்டது.
அது தான், ஐதராபாத்திலிருந்து, சமீபத்தில், 'வாட்ஸ் ஆப்'பில் புகைப்படமாக
பரவியது. ஆனால், யார் அதை வெளியிடப் போகின்றனர், உண்மையான கரன்சியா
என்பதைக் கூட யாரும் உறுதியாகச் சொல்லவில்லை; ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கை
வெளியிடவில்லை.
இடையிடையே, 'கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகமாகி விட்டது; பணம் கையாளும்
முறையைக் குறைத்து, ஆன்லைன் பட்டுவாடா முறைக்கு அனைவரும் மாறுவோம்' என,
ரிசர்வ் வங்கி நுால் விட்டது; அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அக்டோபர் 27ல், அதனுடைய இணையதளத்தில், போலி ரூபாய் நோட்டுகள் குறித்து
எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், அனைத்து வங்கிகளிலும், 'சி சி டிவி'
கேமரா பொருத்துமாறும் கூறியது. கூடவே, '100 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட
தாள்களை, கரன்சி எண்ணும் கருவி மூலம் சோதித்த பிறகே சுற்றுக்கு விட
வேண்டும்' என்றும் உத்தர விட்டது.
அதிர்ச்சி
நவம்பர் 2,செவ்வாய்கிழமை,வங்கிகள் அனைத் துக்கும், ஒரு சுற்றறிக்கை
அனுப்பியது, ஏ.டி. எம்.,களில், 100 ரூபாய் கரன்சிகளை மட்டும் அடுக்கி
வைக்கச் சொல்லி; அதாவது, 500 ரூபாய் வேண்டாம் என்று பொருள்.
அனைத்து வங்கிகளுக்கும் ஒரு வார இடை வெளி கொடுத்து, கையிலிருந்த, 500,
1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது.அடுத்த
செவ்வாய், நவ., 8ல், அன்று நள்ளிரவு முதல், 500 மற்றும் 1,000 ரூபாய்
நோட்டு கள் செல்லாததாக மோடி அறிவித்ததை, வங்கி அதிகாரிகள் உட்பட அனைவரும்
அதிர்ச்சியுடன் எதிர்கொண்டனர்!
'இதுவரை, 2,000 ரூபாய் பதித்த, 350 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
அதாவது, கடந்த மார்ச் வரை புழக்கத்தில் இருந்த, 1,000 ரூபாய் நோட்டுகளின்
பாதிஅளவு இது. ஆனால், 500 ரூபாய் பதித்த,1,500 கோடி தாள்கள் புழக்கத் தில்
உள்ளன; அந்தளவுக்கு புதிய தாள்கள் அச்சிடப்படவில்லை' என்கிறார், பெயர் வெளி
யிட விரும்பாத, வங்கி உயர் அதிகாரி ஒருவர்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...