மேஷம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து
சேமிக்கத் தொடங்குவீர்கள்.
அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்
போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும்.
வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
தன்னிச்சையாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
முக்கியத்தும் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
காலை
10.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பிற்பகல் முதல் கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது
என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
காலை
10.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பிற்பகல் முதல் கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது
என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
கன்னி
கொஞ்சம்
அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக
இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அநாவசியச் செலவுகளை
தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப்
பழகுங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
உங்கள்
அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு
உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.
உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர்
முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வெளியூரிலிருந்து நல்ல ªச்யதி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம்
கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
காலை
10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும்.
பிற்பகல் முதல் அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில்
அமைதி திரும்பும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள்
வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்
மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
காலை
10.15 மணி முதல் சந்திராஷ்டமம் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில்
நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது
நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப்
பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி
விற்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை
உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல
செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும்
சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...