உங்களுடைய
பழைய புத்தகத்திற்கு புதிய முகவரி Putforshare.comநம்மில் பலர் எவ்வளவோ
புத்தகங்களை படித்துள்ளோம்.
( கதை புத்தகமாக இருக்கட்டும், அல்லது பாட
புத்தகமாகட்டும் ) நம்மில் பலர் புத்தகப்புழுவாக உள்ளனர் என்றால் அது
மிகையாகாது. இப்படி படித்துவிட்டு நாம் அந்த புத்தகங்களை கண்டு கொள்வதே
இல்லை.
மேலும் மாணவர்கள் ஒவ்வொரு செமஸ்டர் முடிந்த பிறகு அந்த புத்தகங்களைப் பயன் படுத்துவதே கிடையாது.இவ்வாறு பல புத்தக குவியல்கள் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும். இவ்வாறு இருக்கும் புத்தகங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒரு அருமையான இணையதளம் Putforshare.comஅது மட்டுமில்லாமல் உங்களுக்கு தேவையான புத்தகங்களையும் நீங்கள் இந்த இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
Putforshare- ஐ பயன்படுத்துவது எப்படி? உங்களுடைய கைப்பேசி/ கணினியில் உள்ள பிரவுசரில் Putforshare.com- ஐ ஓபன் செய்யவும். அதில் ஒரு புதிய கணக்கைத் தொடங்கவும். பின்னர் உங்களிடம் உள்ள புத்தகங்களின் விவரங்களை அதில் கொடுக்கவும். நீங்கள் புத்தகங்களைப் பகிர்ந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள வசதியான பொது இடங்களை ( பஸ் ஸ்டாண்டு, கோயில், சர்ச், சிற்றுண்டிசாலை) share point ஆக தேர்வு செய்து கொள்ளவும். Putforshare.com உறுப்பினர்கள் உங்களை இந்த இடங்களில் உங்களை அணுகி தங்களுக்கு வேண்டிய புத்தகங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
Putforshare.com பயன்படுத்த கட்டணம் ஏதாவது உள்ளதா? Putforshare.com- ன் நோக்கம் புத்தகங்களை மறு உபயோகம் செய்து கொள்வதற்கே. எனவே செல்லரித்து போகும் புத்கங்களுக்கு ஒரு புதிய முகவரியை கொடுத்து மற்றவர்கள் பயன் பெறுவதே இதன் நோக்கமாகும். மேலும் இதில் மாத சந்தாவோ, அல்லது புத்தகத்திற்கு பணம் செலுத்தவோ தேவையில்லை.
Putforshare.com புத்தகங்களை பெற்றபிறகு, எவ்வளவு நாட்களில் திரும்ப தர வேண்டும்? Putforshare.com மூலம் பெறும் புத்தகங்கள் எல்லாம் வாடகைக்காக அல்ல. இது ஒரு அன்பளிப்பு போல மற்றவருக்கு கொடுப்பதே. மேலும் நீங்கள் அதைப் படித்த பிறகு மறுபடியும் Putforshare.com- மில் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Putforshare.com மூலம் உங்கள் தனியுரிமைக்கு பாதிப்பு வருமா?Putforshare.com-ல் உங்களுடைய அனுமதியின்றி உங்கள் தகவல்கள் பிறருக்கு பகிரப்படமாட்டாது.Putforshare.com-ஐ பயன்படுத்தி செல்லரித்து போகும் புத்தகங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுப்போம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...