பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற
பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
இந்த, 'ஆப்'பை
பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு
திட்டமிட்டு உள்ளது.
'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என, 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பணப்புழக்கம் குறைந்து, அன்றாட செலவுக்கே மக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது. எனினும், 'டெபிட் கார்டு' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ளோர், தங்கள் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும், பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, மத்திய அரசு முனைந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெட்ரோல் பங்க்குகள், பால் விற் பனை நிலையங் கள், கல்வி நிறுவனங்கள், ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள் என, அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் வகை யில், 'சர்காரி' என்ற பெயரில், மின்னணு முறை யில் பணம் செலுத்தும், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படுகிறது.
அதன் மூலம், சிறிய தேவைகளுக்கு கூட, கையில் பணமின்றி, மின்னணு முறையில் பணம் செலுத்த முடியும். இதை பயன்படுத்த, 'ஸ்மார்ட் மொபைல் போன்' தேவை; எனவே,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மானிய விலையில் ஸ்மார்ட் மொபைல் போன் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும், நிதியமைச்சகமும் இணைந்து நட
வடிக்கை எடுத்து வருகின்றன. இதுபற்றிய அறிவிப்புகள்,விரைவில் வெளியாகலாம் என, தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...