அரசு பெண் ஊழியர் மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக(9 மாதங்களாக) உயர்வு: அரசாணை வெளியீடு: 110 விதி அறிவிப்பு அமல்
அரசு
பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதங்களில் இருந்து (180
நாள்கள்) ஒன்பது மாதங்களாக (270) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு
உத்தரவை பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.சுவர்ணா
திங்கள்கிழமை வெளியிட்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ்
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 90 நாள்களில் இருந்து 180 நாள்களாக ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த விடுப்பு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்தளித்த அறிக்கையில், அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதங்களில் இருந்து (180 நாள்கள்) 9 மாதங்களாக (270 நாள்கள்) உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, கருவுற்றல் தொடங்கி குழந்தை பிறக்கும் வரையில், எந்தக் காலத்தில் 9 மாதங்களுக்கு விடுப்பு தேவைப்படுகிறதோ அதனை பெண் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம். விடுப்பை எந்தக் காலத்தில் இருந்து எடுக்க வேண்டுமென்பதை அந்தந்த அரசு ஊழியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
விடுப்பில் உள்ளோர்: மகப்பேறு விடுப்பினை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ள காலத்துக்கு முன்னதாக, விடுப்பினை எடுத்து ஓய்வில் இருக்கும் அரசு பெண் ஊழியர்களும் மகப்பேறு விடுப்பினை நீட்டித்துக் கொள்ளத் தகுதி படைத்தவர்கள் என்று தனது உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

07.11.2016 join panniachu eligible
ReplyDelete