Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Facebook: குப்பையில் ரூ.500 நோட்டுகள் கிடப்பதாக முகநூலில் படம் வெளியிட்டவர் கைது

       குப்பையில் ரூ.500 நோட்டுகள் கிடப்பதாக முகநூலில் படம் வெளியிட்டவர் கைது; அதிக ‘லைக்ஸ்’ பெறுவதற்காக அவரே நோட்டுகளை போட்டு படம் எடுத்தது அம்பலம்

Image result for 1000மதுராந்தகம், முகநூலில் அதிக ‘லைக்ஸ்’ பெறுவதற்காக ரூ.500 நோட்டுகளை குப்பைத்தொட்டியில் வீசி புகைப்படம் பிடித்த மதுராந்தகம் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ டிரைவர்

மத்திய அரசு அண்மையில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இது தொடர்பாக முகநூலில் (பேஸ்புக்) பல்வேறு தகவல்கள் புகைப்படங்களுடன் வெளியாகி வருகின்றன. அது பற்றி சிறப்பான கருத்து, புகைப்படம் வெளியிடுபவர்களுக்கு அதிக அளவில் பாராட்டும் (லைக்ஸ்) கிடைத்து வருகிறது.


இதைப் பார்த்த காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாந்தகுமார் (வயது 32) என்பவருக்கு தானும் முகநூலில் அதிக பாராட்டுகளை வாங்கிக்குவிக்கவேண்டும் என்று எண்ணம் தோன்றியது.

ஏற்கனவே பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது பற்றி அவர் தீவிரமாக முகநூலில் கருத்து தெரிவித்து வந்தார்.

குப்பைத்தொட்டியில் வீச்சு

அதில் அவருக்கு எதிர்பார்த்தவாறு பாராட்டுகள் வந்த சேரவில்லை என்று தெரிகிறது. இதனால் ரூ.500 நோட்டுகளை குப்பைத் தொட்டியில் வீசி அதைப் புகைப்படமாக எடுத்து முகநூலில் வெளியிட்டால் பரபரப்பான பாராட்டு நிறைய கிடைக்கும் என்று கருதினார்.

இதனால் நேற்று முன்தினம் மதியம் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள ரூ.500 நோட்டுகளை அவர் மதுராந்தகம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பஸ்நிலையத்தின் பின்புறம் ஒரு குப்பைத் தொட்டியில் வீசினார்.

அந்த குப்பைத் தொட்டிக்குள் ரூ.500 நோட்டுகள் குவிந்து கிடப்பதுபோல் தனது செல்போனில் புகைப்படம் பிடித்தார். பிறகு குப்பையில் வீசிய பணத்தை மீண்டும் எடுத்துக்கொண்டார்.

முகநூலில் பரப்பினார்

பின்னர் தான் எடுத்த படத்தை முகநூல் மூலம் பரவச் செய்தார். அவர் எதிர்பார்த்ததைப் போலவே ஏராளமானவர்கள் ‘லைக்ஸ்’ போட்டனர். இதனால் அவருடைய புகழ் அப்பகுதியில் வேகமாக பரவியது. எனினும், சாந்தகுமாரின் இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை.

மதுராந்தகம் நகருக்குள் குப்பைத்தொட்டியில் கேட்பாரற்று ரூ.500 நோட்டுகள் கிடந்தது போல முகநூலில் அதிர்ச்சி தகவல் பரவியதால் அதில் பதிவு செய்யப்பட்டு இருந்த செல்போன் நம்பரைக் கொண்டு மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

சிறையில் அடைப்பு

அப்போதுதான் ஆட்டோ டிரைவர் சாந்தகுமார் முகநூலில் பாராட்டு பெறுவதற்காக குப்பைத் தொட்டியில் ரூ.500 நோட்டுகளை வீசிவிட்டு பின்பு அந்த பணத்தை எடுத்துக் கொண்டதும், இதற்காக கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்டி வந்ததில் கிடைத்த வருமானத்தை பயன்படுத்திக் கொண்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து சமூக ஊடகம் மூலம் மக்களிடையே பீதியை ஏற்படுத்திய செயலுக்காக போலீசார் வழக்குப் பதிந்து சாந்தகுமாரை கைது செய்தனர்.

பின்னர், மதுராந்தகம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு மதுராந்தகம் கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் சாந்தகுமாருக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முகநூல் மூலம் புகழ் பெற விரும்பிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive