Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் !!

          கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
தமிழகத்தில் அரசு, தனியார் 
பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து 47 வகையான விவரங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எமிஸ் சர்வரின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. மாணவரின் ஜாதி உட்பிரிவுகளைக் குறிப்பிடுவதற்கான வழிகள் இல்லை. மேலும் எடை, உயரம் உள்ளிட்ட மாறுபடக் கூடிய தேவையற்ற விவரங்களையும் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் வழக்கமான கல்வி, பள்ளி நிர்வாகப் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்த முறையில் தேவையற்ற விவரங்களைக் கேட்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதோடு, "எமிஸ்' சர்வர் வேகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.




4 Comments:

  1. பகல் பொழுதில் நெட் கிடைப்பதே இல்லை.மாலை 4மணிக்குப் பிறகே விவரங்களை உள்ளீடு செய்ய முடிகிறது .அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இதை செய்வது சற்று சிரமமே ...மேலே தலைவர் குறிப்பிட்டது போல சர்வரை மேம்படுத்தினால் இந்தப் பணியை செவ்வனே செய்ய முடியும்.

    ReplyDelete
  2. Without giving any instructional approach, is it right to evaluate this type of questions?

    ReplyDelete
  3. அதான் ஆதார் வந்துவிட்டதே அந்த எண்ணையே பயன்படுத்தினால் போதும் புதியதாக ஒரு எண் எதற்கு. தேர்வு எண்ணையே மறந்து போகும் நம் மாணவர்கள் இது தேவையா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive