DEO EXAM RESULT | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையத் தலைவர் முனைவர் திரு. க. அருள்மொழி, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஅரசுப்பணியாளர்தேர்வாணையம் தேர்வாணையத்தலைவர் முனைவர்திரு. க. அருள்மொழி, இ.ஆ.ப (ஓ) அவர்கள் 06.11.2016 அன்றுநடைபெற்றதொகுதி IVல்அடங்கியபதவிகளுகான எழுத்துத்தேர்வின்தேர்வுக்கூடஆய்வின்போதுசெய்தியாளர்சந்திப்பில்தெரிவித்தவிவரங்கள்அடங்கிய செய்திவெளியீடு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி IV ல் அடங்கிய பதவிகளின் 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 06.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள 301 தாலுக்கா மையங்களில் நடைபெற்றது. மொத்தம் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை : 15,64,471
தேர்வுக்கூடங்கள் : 5296
தேர்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளர்கள் : 5296
தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் : 78218
மொபைல் குழுக்கள் : 962
பறக்கும் படை ஆய்வு அதிகாரிகள் : 566
தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள் : 5296
சென்னை தேர்வுக்கூடங்களின் எண்ணிக்கை : 365
சென்னைமாவட்டத்தில் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை : 1,12,056
இத்தேர்வில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவில் முதன்மை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அதிகாரி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருவாய்த்துறை, கல்வித்துறை, கருவூலத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் இதரத் துறை அலுவலர்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்புடன் தேர்வு ஏற்பாடுகள் மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.இன்று நடைபெற்ற தொகுதி நான்கு தேர்வில் 80.5% தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் தேர்வாணைய மாண்புமிகு உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரி மற்றும் இதர அலுவலர்களும் ஆய்வுப்பணியில் பங்கேற்றுள்ளனர்.மேலும் தேர்வாணைய மாண்புமிகு உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரி மற்றும் இதர அலுவலர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 12 மாத காலத்தில் நடைபெற்ற முக்கிய செயல்பாடுகளாவன:
1.நடைபெற்றத் தேர்வுகளின் எண்ணிக்கை : 15
2.நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளின் எண்ணிக்கை : 13
3.முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேர்வுகளின் எண்ணிக்கை : 22
(முக்கியமாக நிலுவையிலிருந்த, உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் போன்ற பதவிகளுக்கான இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.)
4.கடந்த ஜூன் 2016 வரை நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. நிலுவையிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும்.
5.ஜூன் 2016ற்குப் பிறகு நடைபெற்ற 9 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் அடுத்தடுத்து வெளியிடப்படும்.
6.85000 தேர்வர்களை உள்ளடக்கிய இரண்டு அரசுப்பணியாளர்களுக்கானத் துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
7. நிலுவையிலிருந்த 1600க்கும் மேற்பட்ட நேர்வுகளில் கருணை அடிப்படையில் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான தேர்வாணையத்தின் இசைவு (Concurrence of the Commission) வழங்கப்பட்டுள்ளன.
8. இந்த ஆண்டிலேயே தொகுதி IIA, கிராம நிர்வாக அலுவலர், நீதிமன்றப் பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு விரைவாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
9.எந்தவித ஐயப்பாடுகளுக்கும் இடமில்லாமல், தேர்வாணைய விண்ணப்பதாரர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் 07.11.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. இனி அறிவிக்கை செய்யப்படவுள்ள தேர்வாணைய தேர்வுகளுக்கு இதுபொருந்தும்.
10. 85 பணியிடங்களுக்கான தொகுதி 1ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிக்கை 09.11.2016 அன்று வெளியிடப்படவுள்ளது.
11. விண்ணப்பதாரர்கள், தகுதி மற்றும் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே முற்றிலும் தேர்வுசெய்யப்படுவதால் தேர்வர்கள் தங்களை நல்ல முறையில் தயார் செய்து தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...