மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதைத்
தொடர்ந்து, பொது மக்களிடம் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக
ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கம்.
* இத்திட்டம் ஏன் அறிமுகம் செய்யப்பட்டது ?
இந்தியாவில் உயர் மதிப்பிலான கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து விட்டது.
சாதாரண மக்களுக்கு நல்ல நோட்டுக்கும் கள்ள நோட்டுக்கும் இடையிலான
வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை. இத்தகைய கள்ள நோட்டுகள் தேச விரோத
செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கறுப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கும்
பயன்பட்டு வந்தன. பணப்புழக்கத்தை அடிப்படையாக கொண்டது இந்திய பொருளாதாரம்.
இதனால் கள்ள நோட்டுகள் பெரிய தலைவலியாக இருந்தன. கள்ள நோட்டு மற்றும்
கறுப்பு பணத்தைக் கட்டுப்படுத்தவே 500, 1000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள்
வாபஸ் பெறப்பட்டன.
* இத்திட்டம் எப்படி செயல்பட உள்ளது?
இந்த திட்டத்தின்படி 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும். இதை
பயன்படுத்தி இனி பொருட்களை வாங்கவோ, சேமித்து வைக்கவோ முடியாது. அதே
நேரத்தில், வாபஸ் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் பாங்கின்
19 அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம்.
* மாற்றும் போது எனது பணம் முழுமையாக கிடைக்குமா?
நீங்கள் கொடுக்கும் பழைய ரூபாய் நோட்டிற்கு இணையான மதிப்பு உள்ள புதிய நோட்டுகளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.
* ரொக்கமாக பெற்றுக் கொள்ள முடியுமா?
இப்போதைக்கு ஒருவர் 4 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம்.
மீதம் உள்ள தொகையை, அது எவ்வளவாக இருந்தாலும் உங்கள் வங்கி கணக்கில்
செலுத்தி, பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.
* நான் ரொக்கமாக ஒப்படைத்த பழைய ரூபாய் நோட்டிற்கான முழு பணமும் ஏன் திருப்பிக் கொடுப்பதில்லை?
உயர் மதிப்பு நோட்டுகளை வாபஸ் பெற்றதற்கான நோக்கத்தின் கீழ் அவ்வாறு
முழுவதும் பணமாக வழங்க இயலாது. முதலில் ரூ. 4 ஆயிரம் மட்டுமே பெற
முடியும்.* நான்கு ஆயிரம் ரூபாய் என் தேவைக்கு போதுமானதல்ல. அப்போது என்ன
செய்வது? நீங்கள் மீதமுள்ள நோட்டுகளை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி
விட்டு, 'செக்', 'டெபிட் கார்டு', 'கிரடிட் கார்டு' அல்லது இதர மின்னணு
பரிவர்த்தனை மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வங்கி கணக்கு இல்லை என்றால் என்ன செய்வது?
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிகளில் தேவையான ஆவணங்களைக் கொடுத்து புதிய கணக்கைத் துவக்கி கொள்ளலாம்.
* என்னிடம் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழான கணக்கு மட்டுமே உள்ளது. நான் என்ன செய்வது?
நீங்களும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குட்பட்டு பண மாற்ற வசதிகளைப் பெறலாம்.
* என் வங்கி கிளைக்கு தான் செல்ல வேண்டுமா?
ரூ. 4 ஆயிரம் வரை எந்த வங்கி கிளையிலும் உரிய அடையாள அட்டையைக் காட்டி
மாற்றிக் கொள்ளலாம். 4 ஆயிரத்துக்கு மேல் உங்கள் வங்கி கணக்கில் வரவு
வைத்து, பின் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைக்காத வங்கி
கிளைக்குச் சென்றால் உரிய அடையாள அட்டை மற்றும் கணக்கு வைத்திருக்கும்
வங்கி விவரங்களைத் தெரிவித்து, மின்னணு பரிமாற்ற முறையில் பெற்றுக்
கொள்ளலாம்.
* எனக்கு வங்கி கணக்கு இல்லை; என் உறவினர் அல்லது நண்பரின் கணக்கின் மூலம் பணத்தை மாற்றிக் கொள்ளலாமா?
உங்கள் உறவினர் அல்லது நண்பர் எழுத்து மூலம் இதற்கு சம்மதம் தெரிவித்தால்
நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றச் செல்லும்போது, அந்த
அனுமதிக்கான சான்று மற்றும் உங்களுடைய அடையாள அட்டையைக் கொடுக்க வேண்டும்.
* ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்க முடியுமா?
ஏ.டி.எம்., செயல்பட ஆரம்பித்த பிறகு நவ., 18 வரை ஒரு கார்டுக்கு ஒரு
நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். 19ம் தேதியிலிருந்து 4
ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம்.
* செக் மூலம் பணம் எடுக்க முடியுமா?
செக் அல்லது பணம் எடுப்பதற்கான சீட்டு மூலம் வரும் 24 ம் தேதி வரை ஒரு
நாளைக்கு ரூ. 10 ஆயிரம் வரை எடுக்கலாம். வாரத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேல்
எடுக்க இயலாது.
* இந்த பரிமாற்றத்தை எது வரை செய்ய முடியும்?
டிச.,30 வரை இவ்வாறு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு பிறகு ரிசர்வ்
வங்கி நிர்ணயிக்கும் மையங்களில் உரிய ஆவணங்களைக் காட்டி மாற்றிக்
கொள்ளலாம்.
* நான் இப்போது இந்தியாவில் இல்லை; என்ன செய்வது?
வாபஸ் பெறப்பட்ட நோட்டுகள் இந்தியாவில் இருந்தால், இந்தியாவில் உள்ள
ஒருவருக்கு எழுத்து மூலம் அதிகாரம் கொடுத்து அவர் மூலம் பணத்தை மாற்றிக்
கொள்ளலாம்.
* வெளிநாட்டு சுற்றுலாவாசி எப்படி மாற்றுவது?
பழைய நோட்டுகளுக்கான ஆவணங்களைக் காட்டி, விமான நிலையங்களில் 5 ஆயிரம்
ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம்.* வேறு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், யாரை
அணுகுவது?
www.rbi.org.in என்ற ரிசர்வ் வங்கி 'வெப்சைட்' மற்றும் 022 - 2260 2201/022
- 2260 2944 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்னைக்கு தீர்வு
காணலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...