'டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறுவதாக கூறி, தமிழக அரசு கேபிள்,
'டிவி' சேனல்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது' என, கட்டண சேனல் ஒளிபரப்பு
நிறுவனங்களுக்கு, மாநில அரசு தெரிவித்து உள்ளது.
தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவன மேலாண் இயக்குனர் குமரகுருபரன், அனைத்து கட்டண சேனல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் எழுதிஉள்ள கடிதம்:
டிச., 31க்குள், 'செட்டாப் பாக்ஸ்' அடிப்படையிலான,
டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறாத கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு, தனியார், 'டிவி'
நிறுவனங்களும், டிஜிட்டல் ஒளிபரப்பிற்கான உரிமம் பெற்றுள்ள, எம்.எஸ்.ஓ.,
நிறுவனங்களும், சேனல்களை தரக்கூடாது என, மத்திய அரசு, ஒரு அறிவிக்கை
அனுப்பியுள்ளது. தமிழகத்தில், டிஜிட்டல் கேபிள் ஒளிபரப்பு செய்ய, அரசு
கேபிள், 'டிவி' நிறுவனம், மத்திய அரசிடம் விண்ணப்பித்து காத்திருக்கிறது.
இதற்கிடையே, 'டிராய்' என்ற, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 'நாங்கள்
டிஜிட்டல் ஒளிபரப்பை மேற்கொள்ளக் கூடாது' என, தடை போட்டது. அதை எதிர்த்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளோம். எனவே, டிஜிட்டல்
ஒளிபரப்பிற்கு மாறுவதாக கூறி, தனியார் சேனல்களோ, எம்.எஸ்.ஓ., நிறுவனங்களோ,
அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு, சிக்னல் வழங்குவதை நிறுத்தக்
கூடாது. அதை மீறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும். இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...